ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.. வாய் சொல் வீரர்கள் என நிரூபித்த வாசிம் அக்ரம்  – Cinemapettai

Tamil Cinema News

சமீபகாலமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஒரு தலை பட்சமாக வென்று வருகிறதை குறித்து பாகிஸ்தான் லெஜெண்ட் வாசிம் அக்ரம் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார். ஏசியா கப் சூப்பர் 4 போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி

முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடி அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் 10 ஓவர்களில் எடுத்த ரன்களை எடுக்க முடியவில்லை.

இந்திய அணி ஆதிக்கம்

அதே சமயத்தில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் பவர் பிளேவில் 69 ரன்கள் சேர்த்தது. பத்து ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. இந்திய அணி அதிரடியாக முதல் 10 ஓவர்களில் விளையாடிய காரணத்தினால் போட்டியை அங்கேயே வென்று விட்டது.

  • ஆக்ரோஷமான அணுகுமுறை
  • முதல் பந்தில் இருந்து பௌலர்களை சோதிக்கும் வீரர்கள்
  • பாகிஸ்தான் போல் எளிதில் விக்கெட்டை விட்டுக் கொடுக்காத ஆட்டக்காரர்கள்.
  • விக்கெட் களுக்கு இடையே Rotatae செய்யப்படும் ஸ்ட்ரைட்டுகள்.
  • பின்னர்களை வைத்து தாக்கத்தை ஏற்படுத்துவது.
  • ஆல்ரவுண்டர்களை வைத்து அசத்துவது

நாங்கள் இந்திய அணியை விட மிகவும் பலவீனமாக இருக்கிறோம். அவர்கள் சரியான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் ஆனால் பாகிஸ்தான் பொருத்தவரை நிலையாய் நின்று விளையாடுவதற்கு யாருமில்லை. வீரர்களை தேர்வு செய்வதில் பாகிஸ்தான் நிர்வாகம் கோட்டை விடுகிறது.

ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வாய் சொல் வீரர்கள்
Pakistan

 பிசிசிஐ கொடுக்கும் உரிய அங்கீகாரம்

சரியான விகிதத்தில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்கிறது. பிசிசிஐ அவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கி வருகிறது. ஐபிஎல் போன்ற போட்டிகளால் அவர்களின் தரம் அதிகரிக்கிறது. அதன் மூலம் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் விளையாட கற்றுக் கொள்கிறார்கள்.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு அரை சதம் அடித்த பர்கான் ரன் ஏதும் எடுக்காத போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபிஷேக் சர்மா தவற விட்டார். சைம் அயூப் தந்த கேட்ச் வாய்ப்பை குல்தீப் யாதவ் தவறவிட்டார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 171 என நல்ல ஸ்கோருக்கு செல்ல முடிந்தது. இல்லையென்றால் கடந்த போட்டி போலவே குறைந்த டோட்டலே எடுத்திருக்க முடியும்.

மனம் திறந்த வாசிம் அக்ரம்

இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “நான் என் மனம் திறந்து வெளிப்படையாக பேசப் போகிறேன். பாகிஸ்தானை பார்க்க மிகவும் கடினமாக இருக்கிறது. முன்னாள் வீரராக இந்த கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட்டில் ஒவ்வொரு துறையிலும் மிஞ்சி இருக்கிறது”

1758704206 847 ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வாய் சொல் வீரர்கள்
Team

“ஓரிருமுறை நாங்கள் வென்று இருக்கலாம். ஆனால் இந்தியா ஆடிய ஆட்டம் அற்புதமானது. அவர்களிடம் திறமை ஆழம் எல்லாமே இருக்கிறது. எந்த போட்டியிலும் ஒன்று அல்லது இரண்டு கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்படலாம். அது சாதாரணமானது. ஆனால் நீங்கள் பத்து ஓவர்களில் 91 ரன் எடுத்து விட்டு, அடுத்து மொத்தமாக 171 ரன் எடுப்பதை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.