தமிழக அரசியலில் சமீபத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி கரூர் நிகழ்வு. தளபதி விஜய் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலையும் சினிமா உலகத்தையும் உலுக்கியுள்ளது. இந்நிகழ்வு விஜய்-யின் அரசியல் பயணத்துக்கே பெரிய சவாலை எழுப்பியிருக்கிறது.
41 உயிர்கள் பறித்த கரூர் விபத்து
கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் அலைபோல் திரண்டனர். அந்த நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே முதல் குற்றச்சாட்டு. விஜய் நிகழ்வுக்கு தாமதமாக வந்தது, பெரிய இடங்கள் காலியாக இருந்தும் ஏன் அதைப் பயன்படுத்தவில்லை என்ற கேள்விகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, “ஏன் சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை?” என்று பலமுறை வினவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கட்சித் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதவ் அர்ஜுன் சர்ச்சை
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் குற்றச்சாட்டு மழை பொழிகிறது. ஆதவ் அர்ஜுன், தனது ட்விட்டர் பதிவில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டது, சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியது.
மத்திய அரசின் முக்கிய எம்பிக்கள் கரூர்-க்கு வந்து, நிலைமையை நேரில் பார்வையிட்டனர். அங்கு அண்ணாமலை, விபத்து எப்படி நடந்தது என்பதை விரிவாக விளக்கினார்.
இதேவேளை, விஜய் தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகியது. அதில், “இனி எந்த நிகழ்ச்சிகளும் மறு அறிவிப்பு வரும் வரை நடத்தப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தொண்டர்கள் மீது வழக்கு – விஜய்க்கு பெரும் சவால்
41 பேர் பலியான விபத்து, சாதாரண தவறல்ல. கட்சியின் முக்கிய தொண்டர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் “விஜய் ஒரு கட்சி நடத்த முடிகிறாரா? அல்லது இது அவரின் அரசியல் கனவுக்கு தடையா?” என்ற கேள்வி ரசிகர்களிடமும் அரசியல் வட்டாரங்களிலும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் பேரரசு, “விஜய் எப்போதும் தொண்டர்களை குடும்பமாகக் கருதுகிறார். யாரும் உயிரிழக்க வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார். அவர் கஷ்டத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்” என்று உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார்.
மன்சூர் அலிகானின் ஆவேசக் குரல்
சில ஊடகங்களில், “விஜய்யை கைது செய்யலாம்” என்ற கேள்வி எழுந்தது. இதற்கு நடிகர் மன்சூர் அலிகான், தனது இயல்பான ஆவேசத்துடன் பதிலளித்தார். அவர் கூறியதாவது: “விஜய்யை கைது பண்ணிப் பாருங்கள், அப்போதுதான் யார் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்!” என்று சவால் விடுத்தார்.
இந்தக் கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் குறித்து கேள்விக்குறி
விஜய் தரப்பில் “நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டாலும், இது கட்சியின் வேகத்தை குறைக்கும் அபாயம் உள்ளது. 2026 தேர்தல் முன்பாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதால், எதிர்க்கட்சிகள் விஜய்-யின் திறமையை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், ரசிகர்கள் “இந்த சவால்களையும் கடந்து விஜய் வலுவாக திரும்புவார்” என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். கரூர் விபத்து, தமிழ் அரசியலில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது. 41 உயிரிழப்பு, தொண்டர்கள் மீது வழக்கு, நீதிமன்ற விசாரணை, அரசியல் எதிரிகள் குற்றச்சாட்டு – இவை அனைத்தும் விஜயின் அரசியல் பயணத்தில் பெரிய சவாலாக இருக்கிறது.
ஆனால், அவருக்கு உள்ள மக்கள் ஆதரவு, ரசிகர்களின் அன்பு, சில பிரபலங்களின் துணிவு – இவை அனைத்தும் அவரை இந்த சவாலிலிருந்து மீண்டும் எழச் செய்யக்கூடும்.
இந்த துயர சம்பவத்திலிருந்து எப்படியாவது ஒவ்வொரு குடும்பமும் திரும்பி வரவேண்டும். TVK தலைவர் விஜயும் மீண்டு வந்து கட்சியை இன்னும் பலமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் கத்து குட்டி என்று ஏளனம் செய்து வரும் கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்கிறது அரசியல் வட்டாரம்.
“ஒரு தலைவன் பாதையில் தடைகள் வந்தால், அது அவர் செல்லும் பாதை சரியானதுதான் என்பதற்கான சான்று!”