விஜயின் அடுத்த படம் ‘ஜனநாயகன்’ குறித்து வெளியான அப்டேட்! முந்தைய சில மாதங்களாக “படம் வருமா?”, “ரிலீஸ் தாமதமா?” என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவிய நிலையில், இப்போது அதிகாரபூர்வமாக ஒரு பெரிய கண்ணீர் கலந்த மகிழ்ச்சி வந்திருக்கிறது.
ஜனநாயகன் படம் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது! படம் முழுமையாக ரெடி, ரிலீஸ் டேட்டும் லாக். இதை உறுதியாக சொல்லியிருக்காங்க தயாரிப்பு வட்டாரங்கள்.
விஜய்க்கு இது சாதாரண படம் இல்ல. இது அவருடைய கேரியர் கடைசி சினிமா. அதாவது, அவர் அரசியலுக்குச் செல்லும் முன்னாடி வெளிவரும் ‘முடிவு படம்’ என்பதால், ரசிகர்களும், டிஸ்ட்ரிப்யூட்டர்களும், OTT பிளாட்ஃபாரங்களும் முழு மனதுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன் விளைவாக, ‘ஜனநாயகன்’ பிசினஸ் வெடிக்கிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளா தியேட்டர் ரைட்ஸ் மட்டும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவரால் வாங்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 200 கோடி முதல் 250 கோடி வரை. அவர் ruling party-க்கு நெருங்கியவர் என்பதால், பட ரிலீஸ் எந்த தடையும் இன்றி நடைபெறும் என கூறப்படுகிறது. இதுவே சினிமா வட்டாரங்களில் பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.
OTT மற்றும் சாடலைட் ரைட்ஸ் ரேட் கேட்டு ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள். OTT ரைட்ஸ் மட்டும் 121 கோடி! அதையும் வாங்கியிருக்கிறார்கள் ஒரு முன்னணி இந்திய ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபாரம் (அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை). அதோடு, Sun TV சாடலைட் ரைட்ஸ் ₹55 கோடி க்கு வாங்கியிருக்கிறது. இதைச் சேர்த்து பாருங்க மொத்த பிசினஸ் வால்யூ 375 கோடியைத் தாண்டி இருக்கு.
ஜனநாயகன்” டீம் பக்கம் இருந்து வரும் தகவல்படி, இது முழுக்க சமூக-அரசியல் டிராமா மாதிரி அமைந்திருக்கிறதாம். விஜயின் கேரக்டர் ஒரு “மக்களின் பிரதிநிதி” மாதிரி உருவாக்கப்பட்டிருக்கிறது. “கரூர் சம்பவம்” என எல்லாம் அடங்கி இருக்குமாம் ஜனநாயகன்.