[
Mani Ratnam : மணிரத்னத்தின் படங்கள் மிகவும் ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவருடைய கனவு படமான பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்போது கமலை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்திருக்கிறார்.
இந்த படத்தின் கதை பற்றிய ஒரு அலசலை பார்க்கலாம். அதாவது மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம், கமலின் விக்ரம் படங்களை பட்டி டிங்கரிங் பார்த்தது போல தான் தக் லைஃப் படம் இருக்கிறது. அதாவது சொத்திற்காக தனது தந்தையையே மகன் கொலை செய்து விடுவார்.
அதேபோல் தான் அமரன் என்ற சிறுவனை காப்பாற்றி சக்திவேல் வளர்த்து வருகிறார். குற்றம் மற்றும் ஊழல் நிறைந்த ஒரு மாஃபியா கும்பல் இருக்கிறது. அதில் தனது சகோதரர் மாணிக்கத்துடன் சக்திவேல் காவல்துறையினரிடம் ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடத்துகிறார்.
தக் லைஃப் படத்தின் கதை சுருக்கம்
அப்போது சக்திவேல் மீது ஒரு கொலை முயற்சி நடக்கிறது. இதை செய்தது அமரன் தான் என்று சந்தேகபடுகிறார். மேலும் தனது சகோதரர் மற்றும் தன்னை காட்டிக் கொடுத்த அவரது வளர்ப்பு மகனை பழிவாங்கும் படலம் தான் தக் லைஃப்.
மேலும் சக்திவேல் இறந்ததாக நம்பப்படும் நிலையில் அவர் உயிருடன் இருந்து மீண்டும் அந்த கும்பலை எவ்வாறு பழி வாங்குகிறார். அதேபோல தான் விக்ரம் படத்தின் சாயலில் விக்ரம் இறந்து விட்டதாக கருதப்படும் நிலையில் அவர் எவ்வாறு எதிரிகளை அழிக்கிறார் என்று காண்பிக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இந்த இரண்டு படங்களின் ரெஃபரன்ஸில் தக் லைஃப் படம் உருவாகி இருந்தாலும் சுவாரஸ்யமாக கதையைக் கொண்டு சென்று இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆகையால் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.