[
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா நடத்தும் ரெஸ்டாரண்டில் லோக்கல் கவுன்சிலர் வந்து பிரச்சினை பண்ணி பாக்யாவை அவமானப்படுத்தும் விதமாக பேசியதால் செழியன் கோபப்பட்டு அடித்து விடுகிறார். இதனால் செழியன் மற்றும் லோக்கல் கவுன்சிலருக்கு சண்டை ஏற்பட்டு விட்டது. அதை தடுத்து விட்டு பாக்யா, செழியனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.
இருந்தாலும் நடந்த பிரச்சனையால் பாக்கியாவால் ரெஸ்டாரெண்ட் ஓபன் பண்ண முடியாமல் போய்விடுகிறது. அத்துடன் ஹோட்டலின் ஓனர் ஒரு ரெண்டு நாளைக்கு கடை அடைத்திருக்கட்டும். நீங்கள் உங்க பையனே போய் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். லோக்கல் கவுன்சிலர் சும்மா விடமாட்டான் என்று பாக்கியாவிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பாக்யாவும் வீட்டிற்கு வந்த நிலையில் எழில் அமிர்தா படம் விஷயமாக வெளியூர் கிளம்பி விடுகிறார்கள். அவர்கள் போனதும் செழியனை போலீஸ் கூட்டிட்டு போவதற்காக பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்பொழுது பாக்கியா மற்றும் செழியன் நடந்த விஷயத்தை சொல்ல வரும் பொழுது அதை காது கொடுத்து கேட்காமல் போலீஸ், செழியனை கூட்டிட்டு போய் விட்டார்கள்.
இதனால் ஜெனி அழுது கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி இதற்கு காரணம் பாக்கியதான் என்று வழக்கம்போல் பாக்யாவை திட்ட ஆரம்பித்து விடுகிறார். ஜெனிக்கும் பாக்கியம் மீது கோபம் வந்துவிட்டது. உடனே இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜெனியின் அப்பா வீட்டிற்கு வந்து மகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பாக்யாவை திட்டி விட்டுப் போய் விடுகிறார்.
அடுத்ததாக இனியாவுக்கும் விஷயம் தெரிந்த நிலையில் சதீஷ் மற்றும் சுதாகர் இனியாவை கூட்டிட்டு பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்பொழுது இந்த பிரச்சினையை ஊதி பெரிதாகும் விதமாக சுதாகர் குளிர் காய நினைக்கிறார். அதாவது இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடித்து விட்டது. இதை ஈசியாக சமாளிக்க முடியாது, என்னுடைய உதவி இல்லாமல் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப எல்லோரிடமும் குளிர் காய நினைக்கிறார்.
அத்துடன் இதற்கெல்லாம் காரணம் பாக்கியம் நடத்தும் பிசினஸ் தான் என்று பாக்கியாவையும் மட்டம் தட்டும் பேசும் அளவிற்கு சுதாகர் வன்மத்தை கொட்டுகிறார். ஆக மொத்தத்தில் தற்போது பாக்கியாவால் தான் இந்த பிரச்சனை வந்திருக்கிறது என்று மொத்த பழியை தூக்கி பாக்கியம் மீது போட்டு விடுகிறார்கள். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பாக்கியா பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறார்.