[
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி நகை குடுத்து விஜயாவை கவுத்து விடலாம் என்று பிளான் பண்ணினார். அதன்படி நகையை பார்த்ததும் விஜயா பேராசைப்பட்டு நகையை கழுத்தில் போட்டுக்கொண்டார். உடனே ரோகிணி ரொம்ப நல்லவள் மாதிரி மனோஜிடம், நான் எவ்வளவு தூரம் தான் இறங்கி போய் பேச. அத்தை கோபத்தை தணிப்பதற்காக நான் கடன் வாங்கி அந்த நகையை வாங்கிட்டு வந்தேன்.
ஆனால் நீ எனக்காக எதையும் பண்ணாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று மனோஜ் மனசை மாற்றும் விதமாக ஐஸ் வைக்க ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக மீனா, முத்துவை கூட்டிட்டு சீதா காதலிக்கும் அருணை பார்ப்பதற்காக கோவிலுக்கு கிளம்பி விட்டார். போகும் பொழுது முத்து, சீதா காதலிக்கும் நபருக்கு என்ன பழங்கள் இனிப்புகள் பிடிக்கும் என்று கேட்டு அதை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு போகிறார்.
அதே மாதிரி சீதாவின் மாமாவை பார்த்து பேசி எப்படியாவது இந்த சம்மதத்தை முடித்து விட வேண்டும் என்று அருணும் பூ பழங்கள் எல்லாத்தையும் வாங்கிட்டு கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த சீதாவும் அருணும் பேசிக் கொண்டு மீனா மற்றும் முத்துவுக்காக வெயிட் பண்ணுகிறார்கள். பிறகு எதிர்பார்த்தபடி முத்து மீனா கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்.
வந்ததும் சீதாவிடம் பேசிவிட்டு அருணை கூப்பிட சொல்கிறார்கள். உடனே சீதா, அருணை கூட்டிட்டு வந்து முத்து மற்றும் மீனாவிடம் காட்டுகிறார்கள். இவர்கள் ஒன்றாக பார்த்த நேரத்தில் சீதாவை தவிர மற்ற அனைவரும் அதிர்ச்சியாக நின்று விடுகிறார்கள். உடனே அருண், சீதாவிடம் இவன்தான் உன்னுடைய மாமாவா என்று கேட்கிறார். முத்துவும் இவனையா நீ காதலிக்கிறாய் என்று கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அப்படி கிளம்பும்போது மீனா, முத்துவை தடுக்க பார்க்கிறார். ஆனால் முத்து இப்படிப்பட்ட ஒரு ஆளு சீதாவுக்கு தேவையே இல்லை. இந்த கல்யாணமும் நடக்காது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். போனவர் சும்மா இல்லாமல் நேரடியாக சீதாவின் அம்மா வீட்டுக்கு போய் விடுகிறார். அங்கே சத்யாவும் சீதாவின் அம்மாவும் இருக்கும் பொழுது முத்து, உங்க பொண்ணு ஒருத்தரை காதலிக்கிறாள்.
ஆனால் அவன் யார் தெரியுமா என்னை எல்லா பிரச்சினையும் சிக்க வைத்து என்னை டென்ஷன் படுத்திய டிராபிக் போலீஸ் அருண். அவன் நம்ம சீதாவுக்கு செட்டாகாது, அவனைவிட நம்ம சீதாவுக்கு நான் சூப்பரான மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று அருண் காதலுக்கு சங்கு ஊதும் விதமாக முத்து நாரதர் வேலையை பார்த்து விட்டார்.
இன்னொரு பக்கம் அருணுக்கும் அதிர்ச்சியாக நிலையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். சீதாவுக்கும் நம் மாமாவை சீண்டியது அருண் தான் என்று தெரிந்ததால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்கிறார். இதையெல்லாம் சரி செய்யும் விதமாக மீனா அதிரடியான முடிவை எடுக்கும் விதமாக தங்கையும் சந்தோஷம்தான் முக்கியம் என்று முத்துவை சமாதானப்படுத்தி சீதாவுக்கும் அருணுக்கும் கல்யாணத்தை நடத்தி வைப்பார்.