[
Kamal : தமிழ் சினிமாவில் கிளாஸான படங்கள் அதிகம் கொடுத்தவர் என்றால் மணிரத்னம் தான். அவருடைய படங்கள் எல்லாமே ரசனை வாய்ந்ததாக இருக்கும். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, பொன்னியின் செல்வன் என பட்டியில் நீண்டு கொண்டே போகிறது.
இப்போது கமல், சிம்பு ஆகியோர் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்களுக்கு பிறகு கமலுடன் இந்த படத்தில் மணிரத்னம் இணைந்திருப்பது சிறப்பு.
அதோடு மணிரத்னத்தின் பெரும்பான்மையான படங்களில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார். அதேபோல் தக் லைஃப் படத்திலும் ஏ ஆர் ரகுமான் இசை பட்டையை கிளப்பி உள்ளது என்பதை இரண்டு பாடல்கள் வெளியானதில் இருந்தே தெரியவந்துள்ளது.
கமலின் கட்டாயத்தால் மணிரத்னம் செய்த வேலை
மணிரத்னம் பொதுவாக தன்னுடைய படங்களின் பெயர்களை தமிழில் தான் வைப்பார். அவரது படத்தின் பெயரிலேயே கலைத்துவம் தெரியும். அப்படி தான் ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் என்று டைட்டில்கள் இடம் பெற்று இருந்தார்.
ஆனால் முதல்முறையாக Thug Life என்று ஆங்கில டைட்டில் இடம்பெறுவதற்கு காரணம் கமல் தான். இந்த படத்தின் கதையை முன்னால் அமர் ஹை என்ற தலைப்பில் கமல் எழுதியிருந்தாராம். அதை தனது பாணியில் மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில் கிளைமாக்ஸில் மாற்றம் செய்துள்ளார்.
இதை முன்பே கமல் பேட்டியில் கூறியிருக்கிறார். ஆகையால் கமலின் கட்டாயத்தின் பேரில் தான் ஆங்கில டைட்டில் வைக்க மணிரத்னம் முடிவு செய்து இருக்கிறார். குரங்குக்கு வாக்கப்பட்டால் குட்டிக்கரணம் அடித்துதான் ஆக வேண்டும் என்பது போல கமலின் கட்டாயத்தினால் முதல்முறையாக ஆங்கில டைட்டில் மணிரத்னம் டைரக்சனில் வெளியாக இருக்கிறது.