[
Memes: நேற்றிலிருந்து மைசூர் பாக் விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது மைசூர் பாக் என்பதில் பாக் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ஸ்ரீ என சேர்த்துள்ளனர். அதனால் இனி மைசூர்பாக் மைசூர் ஸ்ரீ என்று அழைக்கப்படும்.

இந்த செய்தி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சும்மாவே கலாய்க்கும் நெட்டிசன்கள் இந்த விஷயத்தை சும்மாவா விடுவார்கள்.

ஸ்ரீக்கு பதில் ஜி னு வெச்சிருக்கலாம்ல ஐடியா இல்லாத வடக்கன்ஸ். அப்ப இனிமே பாக்கியலட்சுமி சீரியல் ஸ்ரீ லட்சுமி.

இதுவரை சேப்பாக்கம்ன்னு அழைக்கப்பட்ட ஸ்டேடியம் இனிமேல் சேக் ஸ்ரீ என்று அழைக்கப்படும். பஸ்ஸில் கண்டக்டர் சில்லறை பாக்கின்னு கேட்கக் கூடாது.

சில்லறை ஶ்ரீன்னு தான் சொல்லணும். இப்படியாக பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது.

இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்த மீம்ஸ் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதன் தொகுப்பு இதோ.

