[
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் நண்பர் மனைவியிடம் பேசாமல் இருந்தால் அந்த மனைவி நம்மளை விட்டு போய்விடுவார் என்று பயமுறுத்தி விட்டார். அதனால் அந்த பயத்துடன் வீட்டுக்கு வந்த மனோஜ், ரோகிணி உடன் பயத்திலேயே பேசுகிறார். இன்னொரு பக்கம் சீதாவின் காதலுக்கு முத்துவிடம், மீனா சம்மதம் வாங்க முயற்சி எடுக்கிறார்.
ஆனால் முத்து, சீதாவிற்கு ஏற்ற வரனை கொண்டு வரும் விதமாக இரண்டு மாப்பிள்ளை ஜாதகத்தையும் போட்டோவையும் கொண்டுட்டு வந்து இதுல யாரு சீதாவுக்கு பொருந்துமோ அவங்கள கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று அடாவடித்தனமாக மீனாவிடம் சொல்கிறார். ஆனால் மீனா என்னிடம் கேட்காமல் நீங்கள் ஏன், வீட்டுக்கு போய் எங்க அம்மா கிட்ட சீதா காதலிக்கிற விஷயத்தை சொன்னிங்க என்று கேட்கிறார்.
அதற்கு முத்து எதற்கெடுத்தாலும் என்னதான் உங்க அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறதா எல்லாரும் சொல்லுவீங்க. இப்பொழுது ஒரு விஷயம் வேண்டாம் என்று சொல்லும்போது மட்டும் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா என்று சொல்கிறார். அதற்கு மீனா, சீதாவிற்கு அருணை ரொம்ப பிடித்திருக்கிறது. அருண் ரொம்ப நல்லவன் என்று சீதா நினைக்கிறார்.
அதனால் முதலில் பேசி முடிவு பண்ணலாம் என்று மீனா சொல்லுகிறார். உடனே கோவப்பட்ட முத்து, மீனாவை அடிப்பதற்கு கை ஓங்கி விட்டார். அடுத்து இரண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்த நிலையில் முத்துவிடம் பேசி வேஸ்ட் என்று மீனா முடிவுக்கு வந்து விட்டார். அடுத்ததாக ஸ்ருதி, ரவி ஹோட்டல் ஆரம்பிப்பதற்கு இடத்தை பார்த்து அதில் ஹோட்டலை நடத்தலாம் என்று ரவிடம் சொல்கிறார்.
ஆனால் ரவி உடனே எதையும் பண்ண முடியாது என்று சொல்லிய நிலையில் சுருதி ரவியிடம் பேசி புரிய வைக்கிறார். அதற்கு ரவி, ஓகே என்று சம்மதம் கொடுத்துவிட்டார். அடுத்ததாக மனோஜ் ரோகினி நினைத்தும், ரவி ஸ்ருதியை நினைத்தும், முத்து மீனா காதல் விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததையும் நினைத்து மூன்று பேரும் மொட்டை மாடியில் குடித்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.
அடுத்ததாக மீனாவை பார்த்து டிராபிக் போலீஸ் அருண் பேசுகிறார். அப்பொழுது நான் நீங்க நினைக்கிற மாதிரி மோசமானவன் இல்லை. சீதா மீது உயிரை வைத்திருக்கிறேன், அவளை கண்களாகாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என்று மீனாவிடம் சொல்லி மீனாவின் சம்மதத்தை வாங்கி விட்டார். உடனே முத்துவை சந்தித்து அருண் வந்து பேசின விஷயத்தை சொல்கிறார்.
ஆனாலும் முத்து, சீதா மற்றும் அருண் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் மீனாவுக்கு சம்மதம் இருப்பதால் எப்படியாவது முத்துவை சமாதானப்படுத்தி கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவார்.