நண்பர்கள் இந்த தலைப்பின் கீழ் அவனர்களின் கற்பனை சிறகு விரித்து கவிதையாய் எழுதி மகிழ நாங்கள் வழங்கும்
தலைப்பு ஸ்டார்ட்( ஆரம்பம்)
எந்த ஒரு செயலுக்கும் ஆரம்பம் உண்டு அது போல நம் கற்பனை கவி பனி இங்கு சிறப்பதை காணலாம்
Let's begin our beautiful journy with the beautiful "START"
நாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!
அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!
எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!
ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!
அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹
ஒவ்வொரு தொடக்கம்
ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.
ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.
ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.
முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!