முகம் அறியாத ஒரு உயிரை
இத்தனை ஆண்டுகள் மனதோடு சுமக்க முடியும்
என்று அன்று நான் நினைக்கவில்லை.
பெயரற்ற ஒரு முகம்,
ஆனால் பெயரிட முடியாத அளவுக்கு
என் இதயத்தில் இடம் பிடித்தவள் அவள்.
இரண்டரை ஆண்டுகள்—
விழிகள் காணாமல்,
வார்த்தைகள் மட்டுமே துணையாக,
இதயங்கள் மட்டும் காதலித்த காலம் அது.
இன்று...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த அந்த நாள்,
விதி என் கனவுகளை
நிஜத்தின் முன் நிறுத்தியது.
முதல் பார்வை...
எத்தனை கவிதைகள் பேசினாலும்
அந்த ஒரு நொடியைச் சொல்ல முடியாது.
அவள் விழிகளில் ஒளிந்த அந்த அமைதி,
காதில் அசைந்த ஜிமிக்கி கம்மல்,
தோளில் சாய்ந்த நெக்லஸ்,
கூந்தலில் பூத்த மல்லிகை மணம்,
நெற்றியில் சந்தனத்தின் சாந்தம்,
ரிப்பன் கட்டிய இரு சடை—
ஒவ்வொன்றும் என் இதயத்தில்
முத்தமிட்டுச் சென்றது.
கால்களில் ஒலித்த கொலுசின் சத்தம்
என் இதயத் தாளமாய் மாறியது.
அந்த ஒலி இன்னும்
என் நினைவுகளில் துடிக்கிறது.
அந்த ஒரு சந்திப்பு
ஒரு வாழ்நாள் காதலுக்குப் போதுமானது.
முகம் அறியாத காதல்
அன்று முகம் கண்டது.
அதன் பின்
என் உயிர் அவளை மறக்கவே மறந்தது.
இன்றும் கண்களை மூடினால்
அவள் முன் நிற்கிறாள்.
அந்த நொடி மட்டும்
என்றென்றும் நிற்க வேண்டுமென்று
என் மனம் வேண்டிக் கொள்கிறது
epic கிறுக்கல் ✍️