...... பதினொரு நாள்களின் மௌனம் பின்
தேர்வு அரங்கில் கண்டேன் உன்னை,
தாயின் கரம் பிடித்தபடி
தேவதையாய் நின்ற நொடி.
பேச இயலா நிலை இருந்தும்
அறிமுகம் தந்தாய் அம்மாவிற்கு,
அந்த ஒரு சொல்லே
ஆயிரம் உரையாடலாயிற்று.
தேர்வு முடிந்த நாட்களில்
சந்திப்புகள் அரிதானவை,
எஸ்.எம்.எஸ். எழுத்துகளில்
இதயங்கள் நெருக்கமானவை.
வாழ்க்கை திடீர் திருப்பம் தந்தது—
பன்னிரண்டாம் வகுப்பு பிரிவு,
எதிர்பாரா மாற்றமாயினும்
ஏற்றுக் கொண்ட காதல் நிமிர்வு.
அக்டோபர் பதினான்கு,
உன் பிறந்தநாள் பறக்கும் நாள்,
கொலுசு வாங்கி தந்தபோது
நீ ஆகாயம் தொட்டாய்.
பெற்றோர்–ஆசிரியர் சந்திப்பில்
விதியின் அழகிய விளையாட்டு,
என் தந்தையும் உன் தந்தையும்
முன்னே அறிந்த நட்பு.
ஆசிரியர் முன் நின்றபோது
என் படிப்பு குறை சொல்ல,
உன் சிரிப்பு மட்டும்
என் உலகை நிறைத்தது.
நாட்கள் ஓடி முடிந்தது
பன்னிரண்டாம் பொதுத் தேர்வு,
பின் கொடைக்கானல் பயணத்தில்
நினைவுகள் மலர்ந்த நாள்.
நண்பன் கொண்ட கேமராவில்
ஒரே படம் எடுத்தோம் நாம்,
அது ஒரு படம் அல்ல—
எங்கள் தொடக்கத்தின் சான்று தான்.
இன்றும் அந்தப் படம் சொல்கிறது
எப்படி காதல் தொடங்கியது,
வார்த்தையின்றி,
மெல்ல.........
Epic கிறுக்கல் ✍️