...... பன்னிரண்டாம் தேர்வின் முடிவில்
பாதைகள் பிரிந்தன,
பிரிவு என்ற பெயரில்
விதி சோதனை தந்தது.
முகம் காணா நாட்களில் மீண்டும்
ஃபேஸ்புக் பாலமாயிற்று,
தினந்தோறும் உரையாடல்
தூரத்தையும் கரைத்தது.
ஒரே கல்லூரி கனவு
மனதில் விதைத்தோம்,
பெற்றோர் முன் போராடி
அதே வாய்ப்பை பெற்றோம்.
துறை வேறானாலும்
இதயம் ஒரே இடம்,
அந்த முதல் கல்லூரி நாள்
கண்ணீரும் சிரிப்பும்.
புதுமண காதல்போல்
புதுப் பயணம் தொடங்க,
அந்த நாளே சொன்னது
"இது நம் உலகம்" என்று.
அந்த நாள்முதல் உன் பையில்
என் பசியும் இடம் பெற்றது,
ஒரு டிபன் கூடுதல்
என் வாழ்க்கை முழுமையாயிற்று.
காளான் குழம்பின் மணம்
இன்றும் மனதைத் தட்டும்,
உன் கைகளின் சுவை
காதலின் மொழியாயிற்று.
வாரத்தில் இருமுறை அல்ல—
ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன்,
அன்பு வயிற்றை அல்ல
உயிரையே நிரப்புவதை.
காதல் என்றால்
பூ, கடிதம் என்று சொல்வார்கள்,
நான் சொல்வேன்—
"கூடுதல் சாப்பாடு" தான்.
விதி எத்தனை முறை பிரித்தாலும்
நாம் வழி கண்டோம்,
பசியிலும், போராட்டத்திலும்
காதல் வளர்த்தோம்......