சிலர் வருகிறார்கள் வாழ்வின் பாதையில்,
சிலர் சிரிப்பைச் சுமந்து, சிலர் காயத்தைத் தந்து.
அவர்கள் யார் என்று அல்ல,
அவர்கள் எதைச் செய்தார்கள் என்பதுதான் நினைவாகும்.
நாட்கள் என்றும் ஒரே நிறமில்லை,
சில விடியல்கள் இருளாக கூட வரும்.
ஆனால் ஒவ்வொரு நாளும் இருளல்ல,
அதனால் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
மனதை உறுதியாக்கிக் கொள்,
முகத்தில் சிரிப்பை விட்டுவிடாதே.
அமைதியே உன் ஆயுதம்,
அன்பே உன் சக்தி.
Epic தமிழ் கிறுக்கல் ✍️