News:

Welcome To Startamilchat Forum Page...Register your Intro Here...!

Main Menu

Recent posts

#1
Dhinam Oru Thagaval / சிதம்பர ரகசியம்
Last post by Epic - Mar 16, 2026, 03:35 AM
நடராஜர் சன்னதியில் ஒரு சிறிய திரை (திரைச்சீலை) இருக்கும்.
அந்த திரையை திறந்தால் அங்கு ஒரு சிலை இல்லை.

அதற்குப் பதிலாக:
   •   தங்க வில்வ இலைகள்
   •   அதன் பின்னால் காலியான இடம் (வெற்றிடம்)

இதைதான் "சிதம்பர ரகசியம்" என்று சொல்கிறார்கள்.

அதன் தத்துவ அர்த்தம்:

இந்த வெற்றிடம் ஒரு மிகப் பெரிய தத்துவத்தை சொல்கிறது.

👉 இறைவன் ஒரு உருவத்தில் மட்டும் இல்லை
👉 அவர் எங்கும் நிறைந்துள்ள பரம அறிவு

சைவ சித்தாந்தத்தில் இது:

"ஆகாய லிங்கம்"

அதாவது
இறைவன் அறிவு மற்றும் பரவிய சக்தி என்ற வடிவில் இருக்கிறார்.

சிதம்பர ரகசியத்தின் உள்ளார்ந்த பொருள்

இந்த ரகசியம் மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அதன் கருத்து:
   •   இறைவன் வெளியில் மட்டும் இல்லை
   •   உள்ளத்தில் இருக்கும் சுத்த அறிவே இறைவன்

அதனால் சைவ சித்தாந்தத்தில் ஒரு பிரசித்தமான சொல்:

"உள்ளே உள்ளான் உறையும் சிவன்."

பெரிய தத்துவ விளக்கம்

சிதம்பர ரகசியம் சொல்லும் உண்மை:
   1.   பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தி
   2.   அந்த சக்தி வடிவமற்றது
   3.   அது எல்லா உயிர்களிலும் உள்ளது

அதனால் தான் நடராஜரின் அருகில்
காலியான இடத்தை இறைவனாக வழிபடுகிறார்கள்.


இறுதியாக சிதம்பர ரகசியம் என்பது:

"இறைவன் ஒரு உருவத்தில் மட்டும் இல்லை;
அவர் எல்லா இடத்திலும் இருக்கும் அறிவு மற்றும் ஆகாய சக்தி.

#2
Dhinam Oru Thagaval / யாழி
Last post by Epic - Mar 14, 2026, 04:19 PM
தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையானதும் செழுமையானதுமான நாகரிகமாகும். தமிழர்களின் கலை, இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற பல துறைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. அந்த கலை மரபில் மிகவும் தனித்துவமான ஒரு உருவம் தான் யாழி.

யாழி என்பது உண்மையில் காணப்படும் விலங்கு அல்ல. இது தமிழர்களின் கற்பனை திறனால் உருவாக்கப்பட்ட ஒரு புராண விலங்கு. பல விலங்குகளின் அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு அதிசயமான உருவமாக யாழி கருதப்படுகிறது. பொதுவாக யாழிக்கு சிங்கத்தின் முகம், யானையின் தும்பிக்கை, குதிரையின் கால்கள் மற்றும் பாம்பின் வால் போன்ற அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் தோற்றம் மிகவும் வலிமையானதாகவும் அச்சமூட்டும் தன்மையுடையதாகவும் இருக்கும்.

தமிழர் கட்டிடக்கலையில் யாழி மிகவும் முக்கியமான இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சோழர், பாண்டியர் மற்றும் விஜயநகர அரசர்களின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் யாழி சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோயில்களின் தூண்கள், மண்டபங்கள் மற்றும் வாசல்களில் யாழி வடிவங்கள் அழகாக செதுக்கப்பட்டிருக்கும். இதனை யாழி தூண்கள் என்று அழைக்கின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், காஞ்சிபுரம் கோயில்கள் போன்ற பல பழமையான கோயில்களில் யாழி தூண்கள் காணப்படுகின்றன. அந்தக் கால சிற்பிகள் கற்களில் மிகவும் நுணுக்கமாகவும் அழகாகவும் இந்த யாழி உருவங்களை உருவாக்கியுள்ளனர். இது நம் முன்னோர்களின் கலைத் திறமைக்கும் கற்பனை வளத்திற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.

யாழி பொதுவாக வீரம், வலிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் மக்கள் கோயில்களை தீய சக்திகளிலிருந்து காக்கும் சின்னமாக யாழி உருவங்களை செதுக்கியதாக நம்பப்படுகிறது. சில சிற்பங்களில் யாழி தனது வாயில் ஒரு யானையைப் பிடித்திருப்பது போல காணப்படுகிறது. இது அதன் அளவில்லாத வலிமையை காட்டுகிறது.

யாழிக்கு பல வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான **நான்கு வகை யாழி

முதல் வகை சிம்ம யாழி. இதில் சிங்கத்தின் அம்சங்கள் அதிகமாக இருக்கும். இது வீரத்தையும் தைரியத்தையும் குறிக்கும்.

இரண்டாவது கஜ யாழி. இதில் யானையின் அம்சங்கள் முக்கியமாக இருக்கும். குறிப்பாக தும்பிக்கை போன்ற அமைப்புகள் இதில் காணப்படுகின்றன.

மூன்றாவது மகர யாழி. இது கடல் உயிரினமான மகரத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டதாக இருக்கும். சில கோயில் சிற்பங்களில் இந்த வகை யாழி காணப்படுகிறது.

நான்காவது நர யாழி. இதில் மனித வடிவத்துடன் இணைந்த யாழி உருவம் காணப்படுகிறது. இது தமிழர் சிற்பக்கலையின் தனித்துவத்தையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்துகிறது.

இதனால் யாழி என்பது ஒரு கற்பனை விலங்கு என்றாலும் அது தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் பெருமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான சின்னமாகும்.



#3
வாதை தணியும் வழியில் நான் வாழ்வின் மருங்குகள் பல கடந்தேன்;மூச்சின் இடைவெளி தோறும்கூட மௌன வலி என்னைத் தொடர்ந்தது.

காலத்தின் கரங்கள் பிடித்துகனவின் விளிம்பில் நின்றபோது,காற்றாய் வந்த சோதனைகள் கண்ணீரின் மொழி பேசின.

இரவின் இருள் விரிந்த வேளையில்இதயம் தனிமை உணர்ந்தது;நிலவின் மந்த ஒளி கூடநினைவின் வலியைத் தணிக்கவில்லை.

துன்பம் என்னைத் தழுவியபோது துணிவு மட்டும் என்னைத் தாங்கியது;அலைகள் அடித்த கடல் போல்அமைதி உள்ளத்தில் போராடியது.

மண்ணின் மணம் போலவே மனதில் வலி நிறைந்திருந்தது;ஆனால் விதியின் வாக்கினைத் தாண்டிவீழாத மரம் போல நின்றேன்.

மரங்கள் காற்றில் குனிந்தாலும் வேர்கள் மண்ணை விட்டதில்லை;அதுபோல் என் உள்ளமும்உறுதியை விட்டுத் தளரவில்லை.

காலம் ஒரு மௌன குரு;காயங்கள் அதன் பாடங்கள்;வாதை அதன் எழுத்துக்களாகவாழ்க்கை நூலில் பொறிக்கப்பட்டது.

கண்ணீர் சொட்டிய தருணங்கள் கடந்த காலம் ஆகி மறைந்தாலும்,அவற்றின் சுவடுகள் மட்டும்ஆன்மாவின் ஆழத்தில் நிற்கின்றன

மேகம் கலைந்தபோது
மனத்தின் விடியல் பிறந்தது;
துன்பம் தந்த இருள் கடந்தபின்
துணிவின் சூரியன் உதித்தது.

இன்று என் பாதை நீள்கிறது
நம்பிக்கையின் ஒளியோடு;
வாதை தணியும் வழியில் நான்
வாழ்வின் அர்த்தம் அறிந்தேன்.

அழுகையின் ஆழம் கடந்தபின்
அமைதியின் கரை தென்பட்டது;
உடைந்த உள்ளம் கூட
உயிரின் ஒளியை மறைக்கவில்லை.

விழுந்த விதை மண்ணில் புதைந்தாலும்
வேராய் மீண்டும் எழுவது போல,
என் துயரங்கள் அனைத்தும்
என் வளர்ச்சியின் விதைகளாயின.

இப்போது என் நடை மெதுவாகினும்
என் மனம் உறுதியாய் நிற்கிறது;
வாதை தணியும் வழியில் நான்
வாழ்வின் வெற்றியை நோக்கி செல்கிறேன்

Epic கிறுக்கல் ✍️
#4
 Padithathil Pidithathu

"Sirikum Bothu Mugam Azhagu...
"Anbu Kaathum bothu Manam Azhagu...
"Nambikai Varum bothu Vazhkai Azhagu...
"Nee Neeyagave irukumbothu Ellame Azhagu.. :P
#5
தானே தானே தந்தாநேன்னே தானே நானே தந்தாநேன்னே
தானே தானே தந்தாநேன்னே தானே நானே தந்தாநேன்னே


தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்கொரு குணம் உண்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவன் தமிழனடா
தமிழனோட கில்லி விளையாட்டு கிரிக்கெட் டாக மாறிடுச்சு
எங்களோட சடுகுடு ஆட்டம் கபடியாக மாறிடுச்சு
காக்கயும் குருவியும் எங்க ஜாதி
கடலும் மலையும் எங்க கூட்டம்
வந்தாரை வாழவைக்கும் செந்தமிழர் நாடு தாங்க
ஏறு கட்டவும் பாட்டு உண்டு
ஏத்தம் இறைக்கவும் பாட்டு உண்டு
நாத்து நடவும் பாட்டு உண்டு பாட்டில் நல்ல பொருளும் உண்டு (தானே )

#6
ஒளியிழந்த
விழிகளுக்கும்
கனவை தந்தாய்
கலைந்துவிடாதே
இருண்டுவிடும்
என்னுலகம்
#7

 *ஓய்வெடுங்கள்..*


ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்.

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம்!! "நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது" என்று ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்.

நண்பன் அவனிடம் கேட்டான், "இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய்"
அவன் சொன்னான், "இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன்"
"சிறிதும் ஓய்வு இல்லாமலா" என்று கேட்டான் நண்பன். "ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே". "ஆனால், நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி" என்று கேட்டான்.

"நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்" என்று சொன்னான் நண்பன்.

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான். இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்.

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான். ஆனால், அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்.

"நம் ஓய்வு கூட வெற்றியை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும்"
#8
கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே.. இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்.. ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்.

#9

*ஆசிரியரின் அரவணைப்பு*


*உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்! ஓர் நெகிழ்சி சம்பவம்!!*

*புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம்வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.*

*கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான்.*

*இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன், சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான்.*

*அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான். இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.*

*அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறி, 108 ஆம்புலன்சையும் வர வைத்து, பிராணவாயு சிலிண்டர் உதவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.*

*ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க, 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.*

*தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து, நாடித்துடிப்பு ரொம்ப குறைந்து விட்டது. பிராணவாயுவை எடுத்தால் எதுவும் நடக்கலாம் என்று சொல்லி விட, சக மாணவர்கள் கதறினார்கள்.*

*கூலி வேலைக்குச் சென்ற அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அப்போது, மருத்துவமைனையில் இருந்து வெளியில் கொண்டு போறதா இருந்தாலும் கொண்டு போங்க, என்று மருத்துவமனையில் சிலர் சொல்ல, கதறிய பெற்றோர் வீட்டின் அருகே இருக்கும் கொஞ்ச நிலத்தை விற்க அவசரமாக பக்கத்து இடத்துக்காரரை பணத்துடன் அழைத்தும் விட்டனர்.*

*அதே நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட, அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.*

*அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல, காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து, இரு ஆசிரியர்களும் தஞ்சை நோக்கி சென்றார்கள்.*

*அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது, மூச்சுக்காக பிராணவாயு வைத்து, கண்கள் மேல் நோக்கி, எந்த அசைவும் இல்லாத நிலையில் இருந்துள்ளான்.*

*அருகில் நின்ற மருத்துவர்கள் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்று விடும் நிலையில் உள்ளது என்று சொல்ல, கண் கலங்கிய ஆசிரியர்கள் மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன், தம்பி விழிச்சுப் பார், யார், யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க, அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.*

*அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான்.  கை, கால்களை அசைத்தான். உனக்கு ஒன்றும் இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச, பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க, எங்களை தெரியுதா? என்று ஆசிரியர்கள் கேட்க, மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான்.*

*இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான். இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.*

*அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும், கண்ணீரை நிறுத்தி விட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் இல்ல சார், நல்லா இருக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க சார் என்று சொன்ன பிறகு, சார் ஒன்னுக்கு போகனும் என்று சொல்ல அருகிலேயே சிறுநீர் கழிக்க வைத்தனர்.*

*கை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம், அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்து விட்டு, ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர, தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து, மாணவனை பார்த்தார்.*

அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்தியமூர்த்தி மாணவனின் நிலை பற்றி, அடுத்தடுத்து போனில் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆசிரியர்கள் வெளியே வரும் வரை மாணவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும், மாணவனுக்காக காத்திருந்தனர்.*

*நாங்கள் ஏற்றிய பிறகு உயிரை காக்க வேண்டும் என்று தான் போராடுறோம். அதே போல கொண்டு வந்துட்டோம். ஆனாலும் மருத்துவ சிகிச்சையை விட, ஆசான்களின் குரல் சிகிச்சை தான் மாணவனை காப்பாற்றி இருக்கிறது என்றனர்.*

*இரவு 9 மணிக்கு பிராணவாயு வேண்டாம் என்று அகற்றச் சொன்ன மாணவன், தனக்கு பசிக்கிறது என்று டீ வாங்கி வரச்சொல்லி குடித்திருக்கிறான்.*

*10.30 மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவன் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றும் சிகிச்சை தொடங்கியுள்ளது. பணி மருத்துவர்களும், ஆசிரியர்களை பாராட்டினார்கள்.*

*வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படக் காட்சியை போல தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இரு ஆசிரியர்கள் செய்துள்ளனர் என அனைவரும் பரவலாக ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.*

*சம்பவம் குறித்து ஆசிரியர் மணிண்டன், மாணவனுக்கு உடல்நலமில்லை என்பது மருத்துவமனைக்கு சென்ற போது தான் தெரியும்.

 சுயநினைவின்றி அசைவற்று கிடந்தான். மருத்துவர்கள் சிலிண்டர் உதவியில் உயிர் இருப்பதாக சொன்னார்கள். ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து மனதை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில், மூர்ச்சையாகி கிடந்த மாணவன் காதில் பேச, பேச அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு அசைவு தெரிந்தது.*

*அதைப் பார்த்து அடுத்தடுத்து அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச, பேச கண் விழித்தான். நினைவோடு எங்களை அழைத்தான். இப்ப நல்லா இருக்கிறான். அதைப் பார்த்த மருத்துவர், மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.*

*ஆனாலும் தாய், தந்தைக்கு பிறகு ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் மாணவனின் மனதை படித்தோம். உயிரை பெற்றோம். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்கேன் எடுக்க அவனே நடந்து போய் இருக்கிறான் என்றார் ஆனந்த கண்ணீரோடு, வாழ்த்துக்கள் ஆசிரியர்களே!*
#10
ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு