News:

Welcome To Startamilchat Forum Page...Register your Intro Here...!

Main Menu

Recent posts

#41
USER Introduction / My intro 😁
Last post by Sri - Dec 23, 2025, 05:16 PM
Hello STC family na enga new vanthurukke etha site solratha Vita family sollala I love this STC family because enga na vanthappo rompa heart break agitha vanthe na sad erukkailala ennaiyave maranthu Happy ya sirisa oru place na stc solluve enga erukka mytri akka RDX boss mr local smile queen evuga kittatha na first pesuna apro enga erukka rompa putisirukku I love STC family ���enna paththi sollikura alavukku naavlo periya alula illa but athasu panni Life nalla nilamaikku varanunu ninaikkura oru kutty princess nu sollala ��� and my character na mirror � mari niga apdi enkitta nadanthu kurigalo anthamaritha nanu nadanthuppen anba erunthalu seri vamba erunthalu seri niga kutukkuratha Vita double madangatha kutuppe nana yaru vambukku po mate enna thedi varatha vitavu maten���� TQ for reading � Sri  ;D  ;D
#43
பத்தாம் வகுப்பு தேர்வு பின்
பார்வை தூரமானது,
சந்திக்க நேரமின்றி
சமயம் விரைந்து போனது.

ஒரே இடம் உயர்நிலை,
ஒரே கனவு பாதை,
நாள்தோறும் சந்திப்போம்
என்ற நம்பிக்கை தீபம்.**

யாரறிவார் எங்கள் காதல்?
டாம்–ஜெரி நாடகம் தான்,
சண்டையில் சிரிப்பு ஒளித்து
சொல்லாத காதல் நாம்.**

ஞாயிறு சிறப்பு வகுப்பில்
ஒரே நிற உடை கனவு,
இன்றும் நினைவில் நிற்கும்
அந்த நாள் என் உலகு.**

ஏர்செல் சிம் கைபேசியில்
எஸ்.எம்.எஸ். உயிர் மொழி,
சின்ன எழுத்தில் சொன்ன காதல்
நெஞ்சில் நிறைந்த கவிதை.**

ஒரே மண் நாட்டு உறவு
விதியின் விசேஷம்,
மிதிவண்டியில் வந்தேன்
மாடி முகம் காணவே.**

பால்கனி நிழல் பார்வை
போதும் எனும் காதல்,
கண் காணும் அந்த நொடி
காலம் நிறுத்திய வேளை.**

இன்றோ காலம் மாறினாலும்
நாங்கள் மாறவில்லை,
அதே துடிப்பு, அதே புன்னகை
உயிரோடு வாழ்கிறது.**

பதினொன்றாம் தேர்வு முன்
நோய் உன்னைத் தொட்டபோது,
மொழியும் மௌனமானது,
சந்திப்பும் கனவானது.**

பேசா நாட்கள், காணா நாட்கள்—
முதல் பிரிவு அது,
காதல் வலியை அறிமுகம் செய்த
முதல் பாடம் அது.........

Epic கிறுக்கல் ✍️
#44
முகம் அறியாத ஒரு உயிரை
இத்தனை ஆண்டுகள் மனதோடு சுமக்க முடியும்
என்று அன்று நான் நினைக்கவில்லை.

பெயரற்ற ஒரு முகம்,
ஆனால் பெயரிட முடியாத அளவுக்கு
என் இதயத்தில் இடம் பிடித்தவள் அவள்.

இரண்டரை ஆண்டுகள்—
விழிகள் காணாமல்,
வார்த்தைகள் மட்டுமே துணையாக,
இதயங்கள் மட்டும் காதலித்த காலம் அது.

இன்று...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த அந்த நாள்,
விதி என் கனவுகளை
நிஜத்தின் முன் நிறுத்தியது.

முதல் பார்வை...
எத்தனை கவிதைகள் பேசினாலும்
அந்த ஒரு நொடியைச் சொல்ல முடியாது.

அவள் விழிகளில் ஒளிந்த அந்த அமைதி,
காதில் அசைந்த ஜிமிக்கி கம்மல்,
தோளில் சாய்ந்த நெக்லஸ்,
கூந்தலில் பூத்த மல்லிகை மணம்,
நெற்றியில் சந்தனத்தின் சாந்தம்,
ரிப்பன் கட்டிய இரு சடை—
ஒவ்வொன்றும் என் இதயத்தில்
முத்தமிட்டுச் சென்றது.

கால்களில் ஒலித்த கொலுசின் சத்தம்
என் இதயத் தாளமாய் மாறியது.
அந்த ஒலி இன்னும்
என் நினைவுகளில் துடிக்கிறது.

அந்த ஒரு சந்திப்பு
ஒரு வாழ்நாள் காதலுக்குப் போதுமானது.
முகம் அறியாத காதல்
அன்று முகம் கண்டது.
அதன் பின்
என் உயிர் அவளை மறக்கவே மறந்தது.

இன்றும் கண்களை மூடினால்
அவள் முன் நிற்கிறாள்.
அந்த நொடி மட்டும்
என்றென்றும் நிற்க வேண்டுமென்று
என் மனம் வேண்டிக் கொள்கிறது

epic கிறுக்கல் ✍️
#45
Quote from: Epic on Dec 19, 2025, 12:06 PMதன்னுள் ஒளி கண்ட மனிதனுக்கு
இருளென்பதோர் பெயரே இல்லை;
நம்பிக்கை எனும் நெருப்பை ஏந்தினால்
நெஞ்சம் தானே தீபமாகும்.

பிறப்பால் யாரும் பெரிதல்ல,
பெருமை பெறுவது எண்ணத்தினால்;
உள்ளம் உயர்ந்த உச்சியிலே
உயர்வு தானே வந்து நிற்கும்.

வீழ்ந்த போதும் வலிமை காக்கும்
விழிப்புணர்வே தன்னம்பிக்கை;
தோற்ற இடத்தில் தேறல் தேடி
தொடரும் பயணம் வெற்றிப் பாதை.

பயமென்பது பேதை எண்ணம்,
பணிவோ அல்ல பலவீனம்;
அச்சம் நீங்கும் அன்றே மனிதன்
அறிவின் அரசன் ஆவான்.

கல்லென நிற்கும் கடும் தடையும்
கரைந்தே போகும் காலம் வரும்;
உழைப்பும் நம்பும் துணிவும் சேர்ந்தால்
உலகம் நமதே என்பதுண்மை.

பிறர் நகைக்கும் பேதைச் சொற்கள்
நெஞ்சில் சாயல் பதிக்காதே;
உன்னை நீயே மதித்த நொடியில்
உயர்வு உன்னை மதிக்கும்.

தோல்வி என்பதோர் தீர்ப்பல்ல,
தூண்டும் ஓர் பாடம் அதுவே;
கற்றுக் கொண்டால் கடந்து செல்ல
காலம் தானே வழி தரும்.

விதியைக் குற்றம் சொல்லும் முன்னே
வினையை நீயே சீரமை;
உன் கையில் தான் நாளைய உலகம்
உறுதியுடன் நம்பு அதனை.

எண்ணம் தூய்மை, செயல் நேர்மை,
இரண்டும் சேர்ந்த நெஞ்சம் வலிமை;
தன்னம்பிக்கை என்ற ஒரே சொல்
தரணி ஆளும் தந்திரம்.

மண்ணில் பிறந்த மனிதன் யாவும்
மகத்துவம் பெற இயலும்;
தன்னை நம்பும் துணிவு கொண்டால்
தெய்வமும் அவன் துணை நிற்கும்.

இன்று விதைத்த உறுதி விதை
நாளை வெற்றிப் பயிராகும்;
சோர்வு ஒழிந்து செயலில் நிலைத்தால்
சிகரம் தானே குனியும்.

எழு மனிதா! எரியும் கனவுடன்,
எண்ணம் தளர விடாதே;
உன்னை நம்பும் அந்த நொடியே
உன் வாழ்க்கை மாறும் தருணமே!
Awesome 👍
#46
Quote from: Mytri on Dec 17, 2025, 04:57 PMநாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!

அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!

எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!

 ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!

அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹

Mass mass
#47
தன்னுள் ஒளி கண்ட மனிதனுக்கு
இருளென்பதோர் பெயரே இல்லை;
நம்பிக்கை எனும் நெருப்பை ஏந்தினால்
நெஞ்சம் தானே தீபமாகும்.

பிறப்பால் யாரும் பெரிதல்ல,
பெருமை பெறுவது எண்ணத்தினால்;
உள்ளம் உயர்ந்த உச்சியிலே
உயர்வு தானே வந்து நிற்கும்.

வீழ்ந்த போதும் வலிமை காக்கும்
விழிப்புணர்வே தன்னம்பிக்கை;
தோற்ற இடத்தில் தேறல் தேடி
தொடரும் பயணம் வெற்றிப் பாதை.

பயமென்பது பேதை எண்ணம்,
பணிவோ அல்ல பலவீனம்;
அச்சம் நீங்கும் அன்றே மனிதன்
அறிவின் அரசன் ஆவான்.

கல்லென நிற்கும் கடும் தடையும்
கரைந்தே போகும் காலம் வரும்;
உழைப்பும் நம்பும் துணிவும் சேர்ந்தால்
உலகம் நமதே என்பதுண்மை.

பிறர் நகைக்கும் பேதைச் சொற்கள்
நெஞ்சில் சாயல் பதிக்காதே;
உன்னை நீயே மதித்த நொடியில்
உயர்வு உன்னை மதிக்கும்.

தோல்வி என்பதோர் தீர்ப்பல்ல,
தூண்டும் ஓர் பாடம் அதுவே;
கற்றுக் கொண்டால் கடந்து செல்ல
காலம் தானே வழி தரும்.

விதியைக் குற்றம் சொல்லும் முன்னே
வினையை நீயே சீரமை;
உன் கையில் தான் நாளைய உலகம்
உறுதியுடன் நம்பு அதனை.

எண்ணம் தூய்மை, செயல் நேர்மை,
இரண்டும் சேர்ந்த நெஞ்சம் வலிமை;
தன்னம்பிக்கை என்ற ஒரே சொல்
தரணி ஆளும் தந்திரம்.

மண்ணில் பிறந்த மனிதன் யாவும்
மகத்துவம் பெற இயலும்;
தன்னை நம்பும் துணிவு கொண்டால்
தெய்வமும் அவன் துணை நிற்கும்.

இன்று விதைத்த உறுதி விதை
நாளை வெற்றிப் பயிராகும்;
சோர்வு ஒழிந்து செயலில் நிலைத்தால்
சிகரம் தானே குனியும்.

எழு மனிதா! எரியும் கனவுடன்,
எண்ணம் தளர விடாதே;
உன்னை நம்பும் அந்த நொடியே
உன் வாழ்க்கை மாறும் தருணமே!
#49
தொடக்கம்

ஒரு தொடக்கம்...
அது
எப்போதும் வெற்றியின் வாசலாக இருப்பதில்லை!

சில சமயம்,
அது தோல்வி என்னும்
இருட்டறையின்
முதல் படிக்கட்டாக இருக்கும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
நின்றுவிட்ட வாழ்க்கை
எப்போதும் சிதைந்த சரித்திரமே...
நகரத் துணிந்த வாழ்க்கைதான்
வரலாற்றின் முதல் வரி! ✨

முதல் அடியை எடுக்கும் போது
பயம் —
கால்களைப் பிணைக்கிறது 😔
நம்பிக்கை —
கைகளைப் பிடித்து இழுக்கிறது 🤍
சந்தேகம் —
பின்னால் நின்றபடி
மெல்லக் கேட்கிறது...

" உன்னால் முடியுமா?"

அந்தக் கேள்வியை
செவியால் அல்ல...
இதயத்தால் மிதித்து
ஒரு மனிதன் முன்னேறினால்,
அங்கேயே தொடங்குகிறது
உண்மையான வாழ்க்கை! 🔥

தொடக்கம்
எப்போதும்
புன்னகை பூசி வருவதில்லை!

வலி,
வியர்வு,
கண்ணீர் —
இந்த மூன்றையும்
தன் உடையில் தைத்துக் கொண்டே
அது பெரும்பாலும் வருகிறது 💧

சில தொடக்கங்கள்
காதலாய் மலர்கின்றன 🌹
சில தொடக்கங்கள்
பிரிவாய் மாறி
நெஞ்சைச் சிதைக்கின்றன 💔

ஒரு கணச் சிரிப்பில்
உலகமே கிடைத்ததுபோல் தோன்றும்,
அதே கண்கள்
ஒரு கணத்தில்
உலகமே இழந்ததுபோல்
நீரில் கரையும்...

இதுவும் ஒரு தொடக்கமே!

அம்மாவின் கரம் விட்டு
விடுபட்டு,
முதன்முறையாக
பள்ளி வாசல் தாண்டும் அந்த நொடி —
அது பயத்துடன் கலந்த
கனவுகளின் தொடக்கம் 🎒

அப்பாவின் கனவுகளைச் சுமந்து,
தன் ஆசைகளை மௌனமாகப் புதைத்து,
வாழ்க்கை என்னும் போருக்கு
காலை எடுத்துவைக்கும்
மகனின் முதல் நாள் —
அது பொறுப்பின் தொடக்கம் 👣

காதலைச் சொல்லத் துணிந்து,
"இல்லை" என்ற
ஒரே ஒரு சொல்லில்
உடைந்து சிதறிய
மனதிற்கும்...
அதுவே ஒரு தொடக்கம்!

ஏனெனில்...
வீழாதவன் மனிதனல்ல!
வீழ்ந்து எழாதவனே
முடிவானவன்!

மண்ணில் விழுந்த பிறகும்
மண்ணிலிருந்து எழுந்து
தன்னை மீண்டும் நம்பும்
அந்த ஒரே தருணம் —
அதுவே
எல்லாத் தொடக்கங்களிலும்
மிகப் பெரும் தொடக்கம்! 🔥🔥

தோல்வி
ஒருபோதும் முடிவல்ல!
அது
புதிய பாதையைச் சுட்டும்
மௌனச் சுடரே! 🕯�

வலிகள்
நம்மை உடைக்க வருவதில்லை!
நம்மை
ஒரு சிற்பமாகச் செதுக்கவே
வருகின்றன 🪨

நம்பிக்கை சோர்ந்த
இருட்டான இரவுகளுக்குப் பிறகே
விடியல் பிறக்கிறது 🌅
அழுத கண்களுக்குப் பிறகே
தெளிவான பார்வை மலர்கிறது!

தொடக்கம் என்பது
ஒரு நாளின் பெயரல்ல!
அது
ஒரு மனிதன்
மீண்டும் பிறக்கும் தருணம் 🌼

நீ விழுந்தாயா?
பரவாயில்லை!
நீ எழுந்து நின்றாயா?
அதுவே தொடக்கம்! 💪

உன் பயம்
இன்னும் உன்னோடு இருக்கிறதா?
அதைத் தோளில் சுமந்தபடியே
முன்னேறு!
அதுவே துணிச்சலின் தொடக்கம்! 🦁

ஒரு நாள்...
உன் வாழ்க்கை
உன் கைகளில்
நிம்மதியாக அடங்கும் போது 🤲
நீ திரும்பிப் பார்ப்பாய்...

அப்போது புரியும் —
அந்த முதல் அடிதான்
இந்த முழுப் பயணத்திற்கும்
விதையாய் இருந்தது 🌱

ஏனெனில்...
தொடக்கம் தான்
ஒரு மனிதனை
தன்னைத்தானே கண்டடையச் செய்யும்
முதல் அத்தியாயம்! 📖✨

Epic கிறுக்கல் ✍️
#50
ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது. புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான்.

கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண முடிவுக்கு வந்து, நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரு அறையில் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

நிர்வாகத்தின் முதல்வர், "சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் காகிதம் மட்டும் இயந்திரத்தால் கவர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்" என்று அங்குள்ள பொறுப்பாளர்களிடம் கூறினார்.

அதில் ஒருவர், "நாம் ஒவ்வொரு இயந்திரத்தின் பக்கத்திலும் ஒரு வேலையாளை நிறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சோப்பாக பரிசோதித்து, பின் சோப்பு இல்லாமல் வரும் வெறும் காகிதத்தை தனியாக நீக்கிவிட வேண்டும்" என்று ஆலோசனைக் கூறினார்.

மற்றொருவர்,
"நாம் அவர்களுக்கு அதற்காகவே தனி சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும். இது வேலைக்காகாது. வேண்டுமென்றால் இவ்வாறு செய்யலாம், சோப்பின் எடையைக் கணக்கிடும் ஒரு இயந்திரத்தை, நம் இயந்திரங்களோடு இணைத்து விடுவோம். அது எடையைக் கணக்கிட்டு, எடையில்லாமல் வரும் வெறும் காகிதத்தை அகற்றிவிடும்" என்று கூறினார்.

அங்குள்ள அனைவரும் அவரின் ஆலோசனையை கேட்டு கைத்தட்டினர், முதல்வரை தவிர.

அவருக்கோ இவர்களின் யோசனை திருப்தி அளிக்கவில்லை. அச்சமயம் அங்கு கதவு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், இவர்களின் பேச்சைக் கண்டு சிரித்தான்.

அதனை கவனித்த முதல்வர் அவனை அழைத்தார். "தம்பி, ஏனப்பா இவர்களை பார்த்து சிரிக்கின்றாய்?!" என்று கேட்டார்.

அதற்கு அச்சிறுவன்,
"நான் அவர்களை பார்த்து சிரிக்கவில்லை. உங்களை நினைத்துதான் சிரித்தேன்" என்றான்.

சிறிது குழப்பத்துடன்
"அதற்கு என்ன காரணமென்று நான் தெரிஞ்சுக்கலாமா?"
என்று முதல்வர் கேட்டார்.

"நீங்கள் இவர்களையெல்லாம் எப்படித்தான் இந்த கம்பெனியில் உயர் பதவில வச்சீங்களோ... அதை நினைச்சுதான் சிரிச்சேன்" என்று அச்சிறுவன் கூறினான்.

அங்கிருந்த அனைவருக்கும் அச்சிறுவன் மேல் கோபம் வந்தது, முதல்வரை தவிர.

"இங்கே வேலை பாக்குறவங்களுக்கு டீ கொடுக்குற சின்ன பையன் நீ.. நீ எங்களை பாத்து ஏளனமா பேசுற. இவனை உடனே கம்பெனியை விட்டு வெளிய அனுப்புங்க சார்..." என்று அனைவரும் சத்தமிட ஆரம்பித்தனர்.

முதல்வர், அச்சிறுவனிடம் "ஏனப்பா அவ்வாறு கூறுகிறாய்?" என்று கேட்டார்.

"இவர்கள் இருவர் கூறிய ஆலோசனையையும், அதற்கு இங்குள்ளவர்களின் கைத்தட்டலையும் பார்த்தேன். அதனால் தான் அவ்வாறு கூறினேன்" என்றான் அச்சிறுவன்.

அதை கேட்ட அனைவரும், "நீ! என்ன எங்களவிட பெரிய அறிவாளியா?யோசனை சொல்ல வந்துட்டான். போ போய் டீ கொடுக்குற வேலைய மட்டும் பாரு" என்று அவனிடம் சத்தமிட்டனர்.

உடனே முதல்வர், "அனைவரும் அமைதியாக இருங்கள். தம்பி நீ சொல்ல வந்ததை சொல்லுப்பா!" என்று கூறினார்.

"அந்த சோப்பு எல்லாம் கவர் பண்ணி வர்ற வழியில அதற்கு நேரா ஒரு ஃபேனை மட்டும் ஓடவிடுங்கள். சோப்பு இல்லாம வர்ற வெறும் கவர் மட்டும் காத்துக்கு பறந்து விடும். இதற்கு ஏன் தேவையற்ற வேலையாட்களையும், இயந்திரத்தையும் வீண் செலவு செய்து வைக்க வேண்டும்" என்று கூறினான்.

பின் அனைவரும் ஒன்றும் பேசவில்லை. முதல்வர் அவரை தட்டிக்கொடுத்து பாராட்டினார். அன்றைய தேதியிலிருந்து சரியாக எட்டு வருடங்கள் கழித்து, அங்கிருந்த பொறுப்பாளர்களும் மற்றும் அந்த சிறுவனும் ஒரு நாள் மீண்டும் அந்த கம்பெனியில் காலடி எடுத்து வைத்தனர்.

அதனை தனக்குறிய அறையில் இருந்து கவனித்த நிர்வாகத்தின் முதல்வர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறிது
பதற்றம் அடைந்தார்.

காரணம், பொறுப்பாளர்கள் அனைவரும் நிர்வாக பொறுப்பாளர்களாகவே அந்த கம்பெனியினுள் நுழைந்தனர்.

அந்த சிறுவனோ, ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதல்வரே எழுந்து வணங்கும் அளவிற்கு உயர்ந்தான்.

அச்சிறுவனின் பெயர்
" கிங் மார்டின் ". அவர் தான் பின்னாளில் புரட்சியாளர்
மார்ட்டின் லூதர் கிங்.