News:

Welcome To Startamilchat Forum Page...Register your Intro Here...!

Main Menu

கவிதை பெட்டகம் - 001

Started by Administrator, Dec 17, 2025, 04:34 PM

Previous topic - Next topic

Administrator

நண்பர்கள் இந்த தலைப்பின் கீழ் அவனர்களின் கற்பனை சிறகு விரித்து கவிதையாய் எழுதி மகிழ நாங்கள் வழங்கும்

தலைப்பு ஸ்டார்ட்( ஆரம்பம்)

எந்த ஒரு செயலுக்கும் ஆரம்பம் உண்டு அது போல நம் கற்பனை கவி பனி இங்கு சிறப்பதை காணலாம்


Let's begin our beautiful journy with the beautiful "START"

Mytri

#1
நாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!

அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!

எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!

 ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!

அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹

Cleopatra

ஒவ்வொரு தொடக்கம்

ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.

ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.

ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.

முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!

Magathi

Quote from: Mytri on Dec 17, 2025, 04:57 PMநாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!

அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!

எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!

 ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!

அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹
(nice dr ithe mathri enoda ariva use pani eluthren athuku start ah irukatum 🦥🦥🦥🤭🤭)

Magathi

Quote from: Cleopatra on Dec 17, 2025, 07:07 PMஒவ்வொரு தொடக்கம்

ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.

ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.

ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.

முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!

nice sis 💕


Mytri

Quote from: Cleopatra on Dec 17, 2025, 07:07 PMஒவ்வொரு தொடக்கம்

ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.

ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.

ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.

முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!

aagachirandha arumaiyana padaipu ungalin indha varigal

Poochandii

முடிவில்லா கதைகள் உண்டு
ஆரம்பமில்லா கவிதையேது ?

முடிவில்லா நேரம் உண்டு
ஆரம்பமில்லாத அன்பேது ?

முடிவில்லா உறக்கம் உண்டு
ஆரம்பமில்லாத உயிரேது ?

நிஜமில்லா நிழல் உண்டு
ஆரம்பமில்லா கனவேது ?


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு வேலை உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் உண்டு.
இவை அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு.


அற்பமான ஆரம்பத்தை விருப்பமாக ஏற்றால்,
சிற்பமான சிரிப்பும் சிறகாகவேஅமையும்.

ஆரம்பத்தின் எழுச்சி, முடிந்தவரை முயற்சி
காலத்தின் தொடர்ச்சி, இறுதியில் மகிழ்ச்சி