News:

Welcome To Startamilchat Forum Page...Register your Intro Here...!

Main Menu

மதாபர் நவவியாஸ்

Started by Mytri, Today at 09:55 AM

Previous topic - Next topic

Mytri

இந்தியாவில் இருக்கும் கிராமங்களில் மிகவும் செலவச் செழிப்பில் இருக்கும் மிகப் பணக்கார கிராமம் மதாபர் நவவியாஸ் தான். இந்தக் கிராமத்தை ஆசியாவின் பணக்கார கிராமம் என்றும் சொல்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ்-அஞ்சர் நெடுஞசாலைக்கு அருகில் 4 கி.மீ. தொலைவில் உள்ள புஜியோ மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தின் மக்கள்தொகை 15 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிராமத்தினர் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி குடியேறிக்கொண்டிருக்கும் போது இங்கோ மற்ற நகரங்களில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி மக்கள் குடியேறி வருகிறார்கள்.

இங்கு மூன்று மாடிகளுக்கு குறைவான வீட்டையோ கடையையோ பார்க்கமுடியாது. மின்சாரமும் தண்ணீரும் 24 மணி நேரமும் தங்குதடையின்றி கிடைக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மெட்ரிக் பள்ளி, சிறப்பு வசதி பெற்ற சுகாதார மையம், மிகப்பெரிய கோயில் என நகரத்தை தூக்கிப்பிடிக்கும் எல்லா சமாச்சாரங்களும் இங்குண்டு.

இந்தக் கிராமத்தினர் பெரும்பாலோனார் 'லேவா படேல்' என்ற வணிக சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள். இவர்களின் தொழில் நேர்த்திக்கும் பொருளாதார வெற்றிக்கும் அடையாளமாக இந்தக்  கிராமம் உள்ளது.

400 வருடங்களுக்கு முன்பு சவுராஷ்டிரா பகுதியில் இருந்து கட்ச் பகுதிக்கு இவர்கள் இடம் பெயர்ந்தார்கள். 1800-களில் கடல் கடந்த வணிகம் இவர்களுக்கு கை கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வியாபாரிகளாகவும், கொத்தனார்களாகவும், தச்சர்களாகவும், கூலி ஆட்களாகவும் சென்று செல்வம் திரட்டினர்.

இவர்கள் தான்சானியாவில் உள்ள சான்சிபாரில் நிரந்தரமாக குடியேறினர். மேலும், சோமாலியா, உகாண்டா, காங்கோ, ரூவாண்டாவிலும் குடியேறினார்கள். 1960-களில் அங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இப்படி குடியேறிய அனைவரும் தங்கள் தாய் மண்ணான மூதாதையர் கிராமங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் மதாபர்.

1990-களின் தொடக்கத்தில் லேவா படேல்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்ப நினைத்தார்கள். அப்படி திரும்பிய அவர்கள் பழைய கிராமத்திற்கு அருகிலேயே புதிய கிராமத்தை உருவாக்கினார்கள். இந்தக் கிராமத்தில் வாழ்பவர்களில் 60 சதவீதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இந்த சின்ன கிராமத்தில் 25 வங்கிகள் உள்ளன. தனியார், தேசிய வங்கிகள் அனைத்தும் தங்களின் கிளைகளை இங்கே போட்டிப்போட்டு தொடங்குகின்றன. காரணம் குவியும் டெபாசிட் தொகைதான். இங்கு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையே ரூ.20 லட்சம்தான்.

2005-ம் ஆண்டில் இந்த வங்கிகள் வெளியிட்ட கணக்கின்படி 2 ஆயிரம் கோடி ரூபாயை இந்த கிராமத்தினர் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்துள்ளனர். இங்கு ஒரு தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சமாக உள்ளது. இங்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயை வங்கி இருப்பாக வைத்துள்ளனர்.

இதுபோக இவர்கள் ஆண்டுதோறும் 10 முதல் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு நிதியில் போட்டு வைத்துள்ளார்கள். இங்கு நிலத்தின் மதிப்பும் அதிகம். ஒரு சதுர மீட்டர் 35 ஆயிரம் ரூபாய். அரசு இலவசமாக கொடுக்கும் எதையும் இந்த மக்கள் வாங்குவதில்லை. 2001-ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த பெரிய நிலநடுக்கத்தில் இந்தக் கிராமம் லேசான பாதிப்பை சந்தித்தது. அதற்காக நிவாரண தொகையாக மத்திய அரசு ரூ.20 கோடியை இங்கிருக்கும் அஞ்சலகத்தில் சேர்த்தது. ஆனால், இதுவரை ஒருவர்கூட இந்தப் பணம் கேட்டு வந்ததில்லை என்பதே இந்தக் கிராமத்தின் செழுமைக்கு அத்தாட்சி.  இலவசம் இவர்களுக்கு பிடிப்பதில்லை. அது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்பது இவர்களின் நம்பிக்கை.

தேசத்தில் இருக்கும் மற்ற கிராமங்கள் என்று இந்த நிலையை அடையுமோ..?