Ajith : அஜித்துடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய பாராட்டைப் பெற்ற இயக்குனர்கள் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த இயக்குனர்கள் இதற்கு முன்னதாக பெரிய இயக்குனர்களின் படங்களை இயக்கவில்லை.
அஜித்துக்கு பிறகு அவர்களது திரை வாழ்க்கை பிரகாசமாக மாறியது. முதலாவதாக வெங்கட் பிரபு அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மங்காத்தா படத்தில் விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அஜித்தின் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு சென்னை 600028 மற்றும் சரோஜா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
ஆனால் அஜித் தான் அவரது முதல் பெரிய நடிகர். இப்போது மங்காத்தா 2 படம் எப்போது வரும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன் பிறகு அஜித்துடன் கூட்டணி போட்டு வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றி இருந்தார்.
அஜித் தூக்கிவிட்ட மூன்று இயக்குனர்கள்
குறிப்பாக விசுவாசம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் பணியாற்றி இருந்தார். இந்த படம் எதிர்பாராத அளவு தோல்வியை தழுவியது. மீண்டும் சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணி எப்போது இணையும் என காத்திருக்கின்றனர்.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பஹிரா ஆகிய படங்களை எடுத்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டானார். அதன் பிறகு அவருடைய மார்க் ஆண்டனி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் ஆதிக்கை நம்பி அஜித் வாய்ப்பு கொடுத்த நிலையில் குட் பேட் அக்லி படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இப்போது மீண்டும் அஜித்துடன் கூட்டணி போட்டு ஏகே 64 படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது.