கடந்த வாரம் மாரிசன் மற்றும் தலைவி தலைவன் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே நல்ல லாபத்தை கொடுத்தது. தியேட்டர் கலெக்ஷனுக்கு முன்பே ஓ டி டி, டிஜிட்டல் என இருபது கோடிகள் டேபிள் ப்ராபிட் கொடுத்தது.
சுதீஷ் சங்கர் இயக்கிய மாரிசன் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்தது. மாமன்னன் படத்திற்குப் பிறகு பகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படம் நல்ல பிசினஸ் ஆனது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை netflix நல்ல ஒரு தொகை கொடுத்து வாங்கியது.
மாரிசன் படத்தோடு விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படமும் ரிலீஸ் ஆனது. இந்த படம் பாண்டிராஜ் இயக்கத்தில் சத்தியஜோதி நிறுவனம் தயாரித்தது. இதுவரை ஐந்து நாட்களில் தலைவன் தலைவி படம் 30 கோடி வசூலித்து நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தை ஆறு நிறுவனங்கள் தயாரிப்பதாக இருந்தது. கடைசியாக சத்தியஜோதி தயாரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பதாக இருந்தது. அதன் பின்பு சக்தி பிலிம் என்ற புரொடக்ஷன் நிறுவனமும் வந்தது.பின்னர் ஞானவேல் ராஜா மற்றும் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் என 6 நிறுவனங்கள் வரை இழுத்துக் கொண்டே சென்றது
எல்லாரிடமும் தப்பி கடைசியாக இந்த படத்தை சத்தியஜோதி தயாரித்தது. இப்பொழுது அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. விசுவாசம் படத்தை தயாரித்து நல்ல லாபம் பெற்ற அவர்களுக்கு இப்பொழுது இந்தப் படம் தான் அடுத்து நல்ல லாபத்தை கொடுத்துள்ளது .