Ajith: அஜித் கார் ரேசில் பிஸியாக இருக்கிறார். விரைவில் அவருடைய அடுத்த படம் ஆரம்பிக்க இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
அதைத்தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது. அஜித் ஆதிக் இணையப் போகும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.
இதில் பாதி அஜித்தின் சம்பளம் என கூறப்படுகிறது. ஆனால் விநியோகஸ்தராக இருக்கும் ராகுல் இவ்வளவு பெரிய தொகையை போட்டு படத்தை எடுக்கிறார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.
அஜித்துக்கு இப்படி ஒரு மனசா
அது வெளிப்படையாகவே பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது படம் பற்றிய முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது ராகுல் அஜித்திடம் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமம் அனைத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
தியேட்டர் உரிமை மட்டும் நான் வைத்துக் கொள்கிறேன் என டீல் பேசியிருக்கிறார். இதன் மூலம் 120 கோடி அளவில் பட்ஜெட் போட்டு படத்தை தயாரித்தால் போதுமானதாக இருக்கும். அஜித் அவருடைய சம்பளத்தை மேற்கண்ட டீல் மூலம் எடுத்துக் கொள்வார்.
இந்த அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதிசயத்திலும் அதிசயமாக அஜித் அதற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். இது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.
ஏனென்றால் அஜித் ஒரு கொள்கையோடு தான் படத்தில் நடிப்பார். அப்படி இருக்கும்போது தயாரிப்பாளருக்காக இப்படி ஒரு விஷயத்தை அவர் செய்திருப்பது பாராட்டும் வகையில் இருக்கிறது.
இவரை போலவே மாற்றி ஹீரோக்களும் தயாரிப்பாளரின் சுமையை குறைத்தால் நன்றாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க ராகுல் அஜித் படத்தை தயாரிப்பதை பலர் விமர்சித்து வந்தனர். அதனால் அவரே கூட இப்படி ஒரு விஷயத்தை கசிய விட்டுள்ளதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.