மலையாளம், தெலுங்கு வட்டாரத்தில் சினிமாவின் தரத்திற்கு தான் முன்னுரிமை, கொடுக்கிறார்கள் ஆனால் தமிழ் படங்களில் அது தலைகீழாக இருக்கிறது. அங்கே நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் மிக மிகக் குறைவு. மோகன்லால் மம்மூட்டி போன்ற உச்ச நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் 25 கோடிகள் தான்.
மலையாளத்தை காட்டிலும் தமிழில் ஹீரோக்கள் 10 மடங்கு அதிக சம்பளம் பெற்று வருகிறார்கள். அஜித்குமார், ரஜினிகாந்த், விஜய் போன்றவர்கள் 180 கோடியிலிருந்து 250 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார்கள். இவர்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 கோடிகள் கொடுக்க வேண்டியுள்ளது.
இப்படி தமிழ் திரையுலகில் ஹீரோக்களும், இயக்குனர்களும் வாங்கும் சம்பளத்தை சேர்த்தால் 300 கோடிகள் வந்துவிடும் அதன் பிறகு தான் அவர்கள் மீதமுள்ள பணத்தை சினிமாவில் இறக்க வேண்டும். அப்பொழுது அங்கே படத்தின் தரம் நன்றாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது
ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இப்பொழுது தமிழ் சினிமாவில் ரெவென்யு ஷேர் கேட்கிறார்கள். அதாவது வருவாயில் பங்கு. படத்தின் வியாபாரத்தை வைத்து இவர்கள் தங்களுக்கு ஒரு தொகையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இப்பொழுது இளம் நடிகர்கள் பல பேர் அதற்கு பச்சைக் கொடி காட்டி வருகிறார்கள்.
சிம்பு நடிக்க போகும் STR48 படத்திற்கு இந்த அடிப்படையில் தான் சம்பளம் வாங்கப் போகிறார். அஜித் இந்த நடைமுறையில் இல்லாமல் 180 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். குட் பேட் அக்லி படத்தை எடுத்த தயாரிப்பாளர் மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவருக்கு இவ்வளவு தொகையை கொடுத்துள்ளார். ஆனால் படத்தால் 60 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் அடுத்த படத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.