GV Prakash: அன்றாடம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் பதைபதைக்க வைக்கிறது. சமீபத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

பெரும் சலசலப்பையும் அதிர்வையும் ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அரசியல் பிரபலங்கள் ஆளும் கட்சிக்கு எதிராக கொந்தளித்தனர். சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று எல்லோரும் ஆறுதல் கூறினர்.
ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்த இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் மௌனத்தை கடைபிடித்தனர். இதற்கு முந்தைய ஆட்சியில் நடந்த லாக்கப் மரணத்தில் எல்லோரும் கொந்தளித்து கேள்வி எழுப்பினார்கள்.
நெட்டிசன்கள் கோபத்திற்கு ஆளான ஜிவி பிரகாஷ்
ஆனால் இப்போது கண்டும் காணாதது மாதிரி இருந்தது கடும் சர்ச்சையானது. சூர்யா, சத்யராஜ் என எல்லோரையும் நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள். அந்த விவகாரம் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞர் கவின் குமார் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த இவரை சுர்ஜித் என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்துள்ளார்.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரின் சகோதரியை காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் கவின் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ட்வீட் போட்டுள்ளார். அதில் தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை பெரும் குற்றம் தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல் என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் இப்ப மட்டும் எதுக்கு வர்றீங்க. அஜித் செத்தப்போ கோமாவில் இருந்தீங்களா என கொதிப்புடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் இந்த சப்ஜெக்ட்க்கு இப்பதான் உயிர் வந்திருக்கு. ஆனா இதுக்கு பின்னாடியும் காரணம் இருக்கும் என ஜிவி பிரகாஷுக்கு எதிராக கமெண்ட் போட்டு வருகின்றனர்.