Ajith : அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தமிழ் திரையுலகில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நபர். இவர் தன கடின உழைப்பால் திரையுலகிற்கு வந்து இன்று தனக்கான அசைக்க முடியாத இடத்தை தக்க வைத்துள்ளார். இவர் ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிகாட்டுவர் என ஒருசிலர் நக்கலாக பேசுவதும் உண்டு.ஆனால் சிலரோ மாஸ் ஹீரோ கோட் ஷூட்-ல் தான் நடிப்பார் என ஒரு சிலர் பேசுவதும் உண்டு.
அந்த வகையில் அஜித்குமார் முன்னதாக நடித்திருந்த சில படங்களில் தன் வழக்கமான நடிப்பிலிருந்து சற்று வித்யாசமாக நடித்து அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த படங்களும் இருக்கின்றன.அந்தவாறு உள்ள படங்களையும், கதாபாத்திரத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நடிப்பு திறமையை வெளிச்சம்போட்டு காட்டிய 4 படங்கள்..
வில்லன் : வில்லன் படத்தில் அஜித்துக்குமாருடன், நடிகை மீனா, கிரண், விஜயன், ரேகா மற்றும் சிலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் இரட்டை பிறவிகளை போல் நடித்திருப்பார். மாற்றுத்திறனாளியாக நடிப்பில் மிரட்டியிருப்பர் அஜித். இந்த படம் 2002-ல் வெளியானது.
வரலாறு : வரலாறு படம் 2006-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தில் அஜித் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்திருப்பார். அதாவது அப்பா, மகன் போன்று நடித்திருப்பார். இதில் பரதநாட்டிய நடனமாடகூடியவராக இருப்பார். இந்த கதாபாத்திரம் மக்களை அதிக அளவில் கவர்ந்தது. இப்படத்தில் கனிகா, அசின் மற்றும் பலர் இணைந்து நடித்திருப்பார்கள்.
வாலி : இத்திரைப்படம் 1999ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனைவராலும் பேசக்கூடிய படமாகவும் இருந்தது. இதிலும் அஜித்குமார் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கியிருப்பார். இது வாய்பேசமுடியாத, காது கேட்கமுடியாது கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஜோதிகா, சிம்ரன், கருணாஸ் மற்றும் பலர் நடித்திருப்பார்கள்.
மங்காத்தா : மங்காத்தா படம் அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்திருக்கும், இப்படம் 2011-ல் திரைக்கு வந்தது. இதில் அஜித், திரிஷா, அர்ஜுன்,வைபவ், ஆண்ட்ரியா, பிரேம்ஜி இன்னும் பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இப்படத்தில் மன்னிக்காத வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஹீரோக்கு முற்றிலும் நெகடிவ் ரோல் கொடுத்து பிறகு ஹீரோவா கொண்டு செல்வது படத்தின் கதை. இந்த படத்திலும் அஜித் அவர்களின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
இதுபோல நிறைய படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு அஜித்குமார் அவர்கள் ஒரே மாதிரியான ஸ்டைல் பின்பற்றாமல் கதைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கக்கூடிய அற்புதமான நடிகர் என்பது மறுக்க முடியாத ஒன்று.