Ajith Kumar: தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஆதர்ஷ்ய தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித் ஷாலினி. கணவன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்குள் நடந்த நெருக்கடி சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் திருமணம் நடக்க இருக்கும் பொழுது அதை எண்ணி மகிழ்ச்சியுடன் தான் இருப்பார்கள். ஆனால் ஷாலினி அந்த சமயத்தில் கூட அஜித்தால் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறார்.
அஜித்-பிரஷாந்த் நடுவே இருந்த ஈகோ
அஜித் – ஷாலினி, திருமணம் நடக்க இருக்கும் சமயத்தில் தான் பிரசாந்த் மற்றும் ஷாலினி நடிப்பில் பிரியாத வரம் வேண்டும் திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்த படம் படமாக்கப்பட்டிருந்தது.
அஜித் குமார் படத்தின் இயக்குனர் கமலிடம் ஷாலினி திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் கூட ஷூட்டிங் வரமாட்டார் என திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். ஷாலினியும் திருமணத்திற்கு முன்பு படத்தை முடித்துக் கொடுக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஷாலினி கொடுத்த கால்ஷீட் நாட்களில் பிரசாந்த் வரவே இல்லை. இதனால் ஷாலினியின் காட்சிகளில் பெரும்பாலும் பிரசாந்த் வரும் சீன்களுக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளுக்கு அஜித்திடம் ஃபோன் பண்ணி இயக்குனர் கமல் ஷாலினியின் கால் சீட்டை கேட்டிருக்கிறார்.
ஆனால் அஜித் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை இடையே சொருகி இருக்கிறார்கள். அதே மாதிரி அஜித் ஷாலினி திருமணத்திற்கு பிறகு தான் பிரஷாந்த் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
அதற்குப் பிறகு எடுத்த காட்சிகளில் ஷாலினி வரும் சீன்களில் டூப் போட்டு எடுத்திருக்கிறார்கள். அஜித் மற்றும் பிரசாந்த் இடையே இப்படி ஒரு ஈகோ இருந்த விஷயம் தற்போது பிரியாத வரம் வேண்டும் இயக்குனர் கமல் மூலம் தெரிய வந்திருக்கிறது.