Harish kalyan : தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹாரிஸ் கல்யாண். 100% சதவீதம் சினிமாவில் தனது உழைப்பு செலுத்தும் நடிகர் இதுவரை எந்த விமர்சனத்திலும் சிக்காத ஒரு நல்ல நடிகராக வலம் வரும் இவரைப் பற்றி ஒரு செய்தி பரவி வருகிறது.
2018-ல் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை மக்களின் மனதில் பதிய வைத்து, தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் சில வருடங்கள் இடைவெளி விட்டு, லப்பர் பந்து திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.
ஒரு திரைப்படம் பார்த்தால் இவ்வளவு தானே நடிப்பு என்று நாம் அசால்டாக கூறுகிறோம். ஆனால் திரையின் பின்னாடி இருக்கும் கஷ்டங்கள் நடிகர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்கிறது. உழைத்தால் மட்டுமே ஊதியம் என்ற சொல்லிற்கு ஏற்ப இந்த சினிமா துறையிலும் உழைப்பை போட்டால் மட்டுமே முன்னேற முடியும்.
அஜித்க்கு அடுத்த நடிகர்..
சினிமாவில் அஜித் எந்த சீன் கொடுத்தாலும் 100 சதவீதம் டூப் இல்லாமல் தான் தன் நடிப்பை வெளிப்படுத்துவார். அதனால்தான் சினிமாவில் தலைக்கு தனி மதிப்பே இருக்கிறது. எண்ணிலடங்கா ரசிகர்கள் கூட்டமும் அதிகம் தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.
அஜித்துக்கு அடுத்தபடியாக சினிமாவில் தனது உழைப்பை 100% டூப் இல்லாமல் நடிக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண். எந்த காட்சியாக இருந்தாலும் ஸ்டண்ட் போட்டு தான் நடிப்பாராம். தற்போது டூப் இல்லாமல் திரையில் தனது நடிப்பை வெளிப்படுத்தும் நடிகரில் இவரும் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.