Memes: திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் தற்போது தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் செய்த இந்த கொடூரத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு உள்ளனர்.

அதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல் அரசியல் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அப்படித்தான் விஜய் நேற்று அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். உடனே அவருடைய எதிர்ப்பாளர்கள் எத்தனை நாளைக்கு இந்த பேப்பர் போராட்டம். நேரில் வந்து களத்தில் வேலை செய்ங்க என வழக்கம் போல கிண்டல் செய்தனர்.

ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இன்று அஜித்குமார் வீட்டிற்கு விஜய் சென்றுள்ளார். அங்கு அவருடைய அம்மா தம்பியை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் விஜய்.

அது மட்டுமின்றி 2 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்துள்ளார். இதுதான் தற்போது நியூஸ் சேனல்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க டி வி கே கட்சியினர் எங்கள் தலைவர் களத்துக்கு வந்தாச்சு.

உங்கள மாதிரி போன் போட்டு விசாரிக்கல என பெருமை பேசுகின்றனர். இது தவிர செய்தி சேனல்கள் அஜித் வீட்டில் விஜய் என எதுகை மோனையில் செய்தி போட்டு வருகின்றனர்.

உடனே கொதித்துப்போன இணையவாசிகள் அங்க ஒரு வீட்டுல சாவு நடந்திருக்கு. உனக்கு எதுகை மோனை கேக்குதா என மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.
