Gevi Movie Review : மலைவாழ் மக்கள் இப்போதும் அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் போராடி வருகிறார்கள். இதுகுறித்து நிறைய படங்கள் வெளியானாலும் வித்தியாசமான கதை காளத்துடன் எடுத்திருக்கிறார் தமிழ் தயாளன். ஆதவன், ஷீலா, விஜய் டிவி ஜாக்குலின் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
மலைவாழ் கிராமத்தில் சரியான சாலை வசதி மற்றும் மருத்துவ வசதி போன்றவை இல்லாமல் இருக்கிறது. மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் சில உயிர்களும் பறிபோகிறது. ஆதவன் மற்றும் ஷீலா இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள்.
நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஷீலாவுக்கு திடீரென இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்படுகிறது. ஊர் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஷீலாவின் கணவர் ஆதவன் மக்களுக்கு எல்லா வசதியும் வேண்டும் என்ற வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் போலீசார் அவர் மீது முன் பகையில் இருக்கின்றனர்.
கெவி படத்தின் விமர்சனம்
இதனால் ஆதவனை கொல்ல வேண்டும் என்று துரத்துகின்றனர். கடைசியில் அவர் உயிர் தப்பித்து விட்டாரா, ஷீலாவுக்கு குழந்தை பிறந்ததா, மலைவாழ் மக்களுக்கு நீதி கிடைத்ததா என்பதே கெவி படத்தின் மீதி கதை. ஷீலா எப்போதுமே துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.
அதேபோல் இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவனம் பெற வைத்திருக்கிறது. குறிப்பாக பிரசவ வலியில் அவர் துடிக்கும் காட்சிகள் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. ஆதவனும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சில இடங்களில் கதை மிகவும் மெதுவாக செல்கிறது. தேவாவின் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மலைவாழ் மக்களின் வாழ்வியலை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஜெகன் ஜெயசூர்யா. கண்டிப்பாக ஒருமுறையாவது இந்த படத்தை பார்க்கலாம்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5