Memes: இன்று சூர்யா தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் அவரைத் தேடி ரசிகர்கள் அவர் வீட்டு வாசலில் திரண்டனர். அவர்களை ஏமாற்றாமல் சூர்யாவும் வந்து அவர்களுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

அந்த வீடியோக்கள் தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது. அதேபோல் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் வழக்கம் போல மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் இதை கலாய்த்து வருகின்றனர். இந்த கூட்டம் தியேட்டருக்கு வந்தாலே படம் நல்லா ஓடுமே. ஆனால் ஏன் இவர் படம் ஓட மாட்டேங்குது. ஒரு ஹிட் கொடுத்து 13 வருஷம் ஆச்சு என கிண்டல் அடிக்கின்றனர்.

உடனே சூர்யா ரசிகர்கள் எங்க அண்ணன் பிறந்தநாளில் எங்களுக்கு தரிசனம் கொடுத்தார். ஆனால் உங்க தளபதி வாசலில் அத்தனை பேர் காத்திருந்தும் எட்டி கூட பார்க்கவில்லை என பதிலடி கொடுக்கின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் இன்று வைரலாகி கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
