2025-ம் ஆண்டு தமிழ் சினிமா பல அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிறைந்த ஆண்டாக இருந்தது. எதிர்பார்த்த படங்கள் பல தோல்வியடைந்த நிலையில், எதிர்பாராத படங்களே வெற்றி பெற்றன. ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை வசூலில் முன்னிலை வகித்த டாப் 10 படங்களை பார்க்கலாம்.
இந்த பட்டியலில் 10-வது இடத்தில் சியான் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் உள்ளது. அருண்குமார் இயக்கிய இப்படம் ரூ.64 கோடி வசூல் செய்தது. இதற்கு மேலாக, 9-வது இடத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படம் பிடித்துள்ளது. ஜூலையில் வெளியான இப்படம் ரூ.84 கோடி வசூலித்தது. அடுத்து சர்ப்ரைஸ் ஹிட் ஆன டூரிஸ்ட் ஃபேமிலி 8-வது இடத்தில் உள்ளது சசிகுமார் சிம்ரன் நடித்த இப்படம் ரூ.87 கோடி வசூல் செய்தது.
பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் தெரியுமா?
7-வது இடத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் உள்ளது. இது ரூ.97 கோடி வசூலித்தது. ஆனால் அதிக எதிர்பார்ப்பில் வெளியான கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் வசூலில் குறைவு காட்டி, ரூ.97.25 கோடி மட்டுமே பெற்று இந்தப் படம் 6-வது இடத்தை பிடித்தது.
5-வது இடத்தில் தனுஷின் குபேரா படம் உள்ளது. உலக அளவில் ரூ.135.75 கோடி வசூலித்த இப்படம், தனுஷுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. அதைவிட சற்று அதிக வசூலுடன், அஜித் நடித்த விடாமுயற்சி படம் 4-வது இடத்தில் இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரூ.135.89 கோடி வசூல் செய்தது.
3-வது இடத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கிய டிராகன் படம் பிடித்துள்ளது. இது ரூ.151 கோடி வசூல் செய்தது. இரண்டாம் இடத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி உள்ளது. மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த இப்படம் ரூ.246 கோடி வசூல் செய்தது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், கூலி முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த் நடித்த இப்படம், வெளியான நான்கு நாட்களில் கிட்டத்தட்ட ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அடிச்சிருக்கு கூலி, 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக தமிழ் சினிமாவை மீண்டும் உலக மேடையில் உயர்த்தி நிறுத்தியுள்ளது.