Vishal: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் நடிகர் விஷால் செய்து இருக்கிறார். விஷாலுக்கும் தமிழ் ராக்கர்ஸ்க்கும் நடந்த பிரச்சனை எல்லோருக்குமே நினைவிருக்கும்.
அதே போன்று தான் இப்போது யூடியூபர்களுடன் பஞ்சாயத்து பண்ண ஆரம்பித்திருக்கிறார் புரட்சி தளபதி. சமீபத்தில் ரெட் பிளவர் என்னும் திரைப்பட விழாவில் விஷால் கலந்து கொண்டார். அதில் பேசியவர் திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
விஷாலை நெம்பி எடுக்கும் நெட்டிசன்கள்!
அதாவது சினிமா விமர்சனம் என்பது படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களுக்கு பிறகு தான் வரவேண்டும். தியேட்டரில் யூடியூபர்கள் விமர்சனம் செய்வதை திரையரங்கு உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என்று பேசி இருந்தார்.
பிரபல திரைவிமர்சகர் பிரசாந்த் இதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். மூன்று நாள் விமர்சனம் செய்யாமல் இருந்தால் மொக்கை படம் கூட ஓடிவிடும் என்று நினைக்கிறீர்களா. சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என்று நம்புவது போல் தான் இது இருக்கிறது என சொல்லி இருக்கிறார்.
பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களை பொருத்தவரைக்கும் முதல் மூன்று நாளில் வசூலை குவித்து விடும். இப்போதைய உடனடி விமர்சனங்களால் இது பாதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் லோ பட்ஜெட்டில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் விமர்சனங்களுக்கு பிறகு தான் மக்கள் பார்வைக்கு வருகிறது. நிறைய சின்ன படங்கள் விமர்சனங்கள் மூலம் தான் வெற்றி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.