Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நித்தேஷை கொலை பண்ணிய வழக்கில் லாக்கப்பில் இருக்கிறார். ஆனால் பாக்யாவிற்கு இந்த கேஸ் மீது சின்ன சந்தேகம் வந்ததால் நடந்தது என்னவென்று விசாரிக்கும் பொறுப்பில் களமிறங்கினார். அந்த வகையில் ரெஸ்டாரன்ட் பக்கத்திலிருந்து சிசிடிவி கேமராவை பார்த்ததும் சுதாகருக்கும் நித்திஷ் இறப்பிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டார்.
அந்த வகையில் ஆகாஷ் உதவியுடன் சுதாகர் தான் நித்திசை கொலை பண்ணி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து போலீஸ் இடம் ஆதாரத்துடன் நிரூபித்து விட்டார். உடனே லாக்கப்பில் இருந்த கோபி விடுதலை ஆகி அதற்கு பதிலாக சுதாகர் ஜெயிலுக்கு போய் விட்டார். அதனால் இனியாவிற்கு வந்த பிரச்சினை எல்லாம் இதோடு முடிந்து விட்டது.
இதனை அடுத்து ஒரு நாள் முதலமைச்சர் போல ஒரே நாளில் கலெக்டர் ஆகி ஆகாஷ் கெத்தாக பாக்கியா வீட்டிற்கு வந்து விட்டார். உடனே செல்வி, ஈஸ்வரி இடம் என் மகன் கலெக்டருக்கு உங்க இனிய பாப்பாவை பொண்ணு கேட்டு வந்திருக்கிறேன். கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என தைரியமாக கேட்கிறார்.
ஈஸ்வரியும் சரி என்று சொல்லிய நிலையில் இனிய ஆகாசுக்கு திருமணம் நடைபெறப் போகிறது. இந்த திருமணத்திற்கு ராதிகா, மயூவை கூட்டிட்டு வருகிறார். பிறகு கல்யாணம் முடிந்த கையுடன் இனியா ஆகாஷ், எழில் அமிர்தா மற்றும் செழியன் ஜெனி என அனைவரும் அவங்க அவங்க வாழ்க்கை பார்க்க போய்விட்டார்கள்.
அடுத்து கோபி தனியாக இருப்பதை பார்த்து ஈஸ்வரி, பாக்கியவுடன் கோர்த்து விடும் விதமாக பிள்ளைகள் எல்லாத்தையும் கரைசேர்த்து அவங்க வாழ்க்கையை பார்க்க போய்விட்டார்கள். நீயும் என் பையனும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று பாக்யாவிடம் கோர்த்துவிடுகிறார். இதனை பார்த்த ராதிகா எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று சைலன்டாகி எஸ்கேப் ஆகிவிட்டார்.
ஆனாலும் பாக்கியா, எடுக்கப் போகும் முடிவு என்னவென்றால் கடைசி வரை கோபி கூட நான் இருப்பேன். ஆனால் மனைவியாக இல்லை ஒரு தோழியாக இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று ஈஸ்வரிக்கு வாக்கு கொடுக்கப் போகிறார்.