Gossip: அந்த வாரிசு நடிகர் பற்றிய பேச்சு தான் எங்கு திரும்பினாலும் கேட்கிறது. பெரிய ஹீரோவோட மகனா இருந்தால் எங்களுக்கு என்ன என்று ஒரு பக்கம் அவரை வச்சி செய்து வருகின்றனர்.
இதற்கு காரணம் ஹீரோ தம்பி கொஞ்சமே கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியதுதான். முதல் படம் அதுவும் ஹீரோ என்பதால் இப்படி இருக்கலாம் என்பது மற்றவர்களின் கணிப்பு.
அதேபோல் அப்பா பெரிய நடிகர் என்பதால் வந்த திமிராக கூட இருக்கலாம் என்ற பேச்சும் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் வாரிசு நடிகர் இப்போது தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கூட கேட்டு விட்டார்.
உண்மையை புரிந்து கொண்ட வாரிசு நடிகர்
ஆனாலும் சலசலப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் திடீரென ஏன் இந்த மாற்றம் என விசாரித்ததில் அப்பா தான் மகனுக்கு சில விஷயங்களை எடுத்து சொல்லி இருக்கிறாராம்.
திரையுலகை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருந்த மிகப்பெரிய ஜாம்பவான்களின் வாரிசுகள் கூட என்னும் வெற்றிக்காக போராடுகின்றனர். அப்படி இருக்கும்போது அந்த அடையாளம் எல்லாம் இங்கே செல்லுபடி ஆகாது என மகனுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
அதனால் தான் மகன் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவு செய்துவிட்டதாக கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. புரிஞ்சுகிட்டா சரிதான் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.