Manirathnam : இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தமிழ் சினிமாவில் இன்றியமையாத ஒரு நபர். இவர் மக்களுக்கு இனிமையான காதல் கதைகளை கொடுத்த இயக்குனர். இவரது காதல் படங்கள் அனைத்துமே காதல் ஓவியமாக நம் மனதை வருடி சென்றவை.
காதல் படங்கள் மட்டும் தான் இவர் எடுப்பாரா என்று கேட்பவர்களுக்கு கூட நிறைய வித்தியாசமான கதைகளையும் அள்ளிக் கொடுத்திருக்கும் இயக்குனர். இவர் தற்போது அடுத்த பேட்டி ஒன்றில் முன்பெல்லாம் படத்தின் கதையை பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் வசூலை பார்க்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
வேதனையில் மணிரத்னம்..
அதாவது முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் படத்தின் கதை எப்படி இருக்கிறது? எத்தனை நாட்கள் ஓடி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பார்கள். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படம் வெளியானதில் இருந்து 100 கோடி 500 கோடி என்று எவ்வளவு வசூலை ஈட்டி இருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறார்கள்.
இவ்வாறாக பார்க்கும் போது நல்ல கதைக்களம் கொடுக்கக்கூடிய படங்கள் அழிந்து போய் விடுகின்றன. படங்கள் மட்டுமல்ல நல்ல கதையை கொடுக்கும் இயக்குனர்களும் அழிந்து விடுகின்றனர். என்னை போன்ற இயக்குனர்களையும் பண வசூலை பார்த்து அழிச்சிராதீங்க என மனமுருகி பேசி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.
நல்ல கதையால் இந்த மாதிரியான விஷயங்களினால் சீக்கிரம் அழிந்து போய் விடுவார்கள் ஆகையால் இவ்வாறு செய்ய வேண்டாம். நல்ல கதையா நல்ல படமா என்று பாருங்கள். நல்ல கதை மட்டுமே ஒரு இயக்குனரை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் எனவும் கூறியுள்ளார்.
100 கோடி 500 கோடி என்று பண விளையாட்டால் நல்ல இயக்குனர்களை அழித்து விடாதீர்கள் என்றும் மனிதர் தனம் அவர்கள் கூறியுள்ளார். ஆமாம் இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தின் கதையை யாரும் பார்ப்பதில்லை. படம் எவ்வளவு வசூலை பெற்றிருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை