தென் இந்திய சினிமாவின் கிளாமரான தேவதையாக அறிமுகமாகி, பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா, ‘அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூருடன் காதல் ரசியமான காட்சிகளில் நடித்ததும், பாலிவுட் ரசிகர்களை கவர்ந்ததும் பெரிய பேச்சுக்குறியாக மாறியது.
இப்படியே சென்று, தனக்கே உரிய ‘பான் இந்தியா ஸ்டார்’ பட்டத்தை அபாரமாக பிடித்தெடுத்து விட்டார் ராஷ்மிகா. ஆனால் அதே நேரத்தில், இந்தக் கேரக்டர் தேர்வும், அந்த காட்சிகளும் சில ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
வசூலில் சாதனை படைத்தாலும், ‘அனிமல்’ சர்ச்சைகளிலிருந்து தப்பவில்லை. ரன்பீர் கபூரின் அதிகப்படியான புகைபிடிக்கும் காட்சிகள், அவசியமின்றி சேர்க்கப்பட்ட படுக்கையறை சீன்கள் தீவிர விமர்சனத்துக்கு உள்ளானது.
ராஷ்மிகா ஆதங்கம்
படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது. ஹீரோ புகைபிடிப்பது, யாரையும் அதற்கு தூண்டுவது அல்ல என்றும் காண விருப்பம் இல்லையென்றால் பார்க்கவே வேண்டாம் என்றும் விமர்சனங்கள் குறித்து ராஷ்மிகா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும் அதைதான் ‘அனிமல்’ படத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா சினிமாவாக வடிவமைத்துள்ளாா் என விளக்கியுள்ளாா். இதைக் கொண்டு வலுப்படுத்தி விவாதம் செய்ய தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ராஷ்மிகா மந்தனாவின் பதில், புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சிலர் அவரின் கருத்தை மிகுந்த பொறுப்பில்லாத பதிலாக விமர்சிக்க, மற்றொருபக்கம் ரசிகர்கள் “சினிமா ஒன்றுக்கே இவ்வளவு தாக்கமா?” எனக் கேட்கிறார்கள்.
ராஷ்மிகா கூறிய “படங்களை பார்க்காதீர்கள்” என்ற ஒரே வரி தான் இப்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருக்கு. “பொது மக்களுக்கு எதிரான பேச்சா இது?” “தோன்றியதை எதுவும் பேசலாமா?” “பொறுப்பு உள்ள நடிகை என்றால் இப்படி பேசமாட்டார்” என்று பல தரப்பிலிருந்து எதிர்மறை எதிர்வினைகள் வலுத்து வருகின்றன.
இது போன்ற நேரங்களில், நடிகர்கள் கொடுக்கும் பேச்சுகள், ஊக்கமா? ஒடுக்கமா? என்பதுதான் வினா!