Anirudh: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் அனிருத் செய்திருக்கிறார். சமீபத்தில் மதராசி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத் சிவகார்த்திகேயன் உச்சி குளிர அவரை மெச்சி பேசி இருந்தார்.
அத்தோடு இல்லாமல் எனக்கு பஸ்ட் சூப்பர்ஹிட் கொடுத்ததே சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படம் தான் என்று சொல்லிவிட்டார். அனிருத் என்று ஒரு இசையமைப்பாளர் இருப்பது 3 தெரிந்ததே திரைப்படத்தின் மூலம் தான். மேலும் இந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.
ஏன் இப்படி ஒரு தீரா வன்மம்?.
இது அத்தனைக்கும் அவருடைய திறமை தான் காரணம் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதை தாண்டி முதல் சூப்பர் ஹிட் ஆல்பம் என்றால் 3 என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்.
எதற்காக சிவகார்த்திகேயனின் புகழை பாடுகிறேன் என்ற பெயரில் வரலாறை மாற்றி சொல்கிறார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்தது. தன்னுடைய சொந்த அத்தை பெண்ணான ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்தது தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் தனுஷ் தற்போது அனிருத்துடன் படங்களில் பணிபுரியாமல் மீண்டும் தன்னுடைய பழைய தோஸ்து ஜிவி பிரகாஷ் உடன் கைகோர்த்து இருக்கிறார். அத்தனை வன்மத்திற்கும் இதுதான் காரணம், குடும்ப சண்டை தீரா பகையாகி விட்டது என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.