Anirudh : இசையமைப்பாளர் அனிருத் மட்டும்தான் தற்போது தமிழ் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கிறார். இவர் மட்டும்தான் இசையமைப்பாளரா? இவரை மட்டும் ஏன் அனைவரும் புக் செய்கிறார்கள்? என்று வெளியில் சொல்லமுடியாமல் சில இசையமைப்பாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
ஆமாம், தற்போது வெளியாகி இருக்கும், வெளிவர இருக்கும் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைத்து கொடுத்து கொண்டிருக்கிறார்.
300 கோடிக்கு புக் ஆன அனிருத்..
ஏன் இப்படி கஷ்டப்படுகிறார்? என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் இதுக்கு பின்னால் ஒரு 300 கோடி கதை இருக்கிறது. தற்போது கைவசம் உள்ள படங்களை வைத்து 300 கோடியை தாண்டும் அளவிற்கு சம்பாதிக்க உள்ளாராம். அப்படி என்னன்ன படம்லாம் கைவசம் வைத்துள்ளார் என்று பார்க்கலாமா?.
தனது 37ஆவது படமாக “kingdom” படத்தில் இசையமைத்துள்ளார். 38 ஆவது படம் “கூலி”, அடுத்ததாக “மதராஸி” படமும், இதற்க்கு அடுத்து “LIK” படமும், 41 ஆவது படமாக “Magic” என்ற படத்தையும், 42ஆவது படமாக “ஜனநாயகன்”, 43ஆவது படமாக “தி பாரடைஸ்” என்ற படத்தையும் இசையமைத்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக இவரது 44 ஆவது படமாக “Toxic” படத்தையும், இதற்கு அடுத்ததாக “இந்தியன்-3”, 46ஆவது படமாக “ஜெயிலர்-2” படத்தையும், 47ஆவது படமாக “king” படம், 48 ஆவது படம் “devara-2” படமும், அடுத்ததாக “Rolex” படத்தையும், தனது 50ஆவது படமாக “விக்ரம்-3” படத்தையும் இசையமைக்க இதுவரை புக் ஆகியுள்ளார். அனிருத் கைவசம் வைத்திருக்கும் படத்தை பார்த்தாலே எப்படியும் சம்பளம் 300 கோடியை தாண்டிவிடும்.
இவ்வாறு தொடர்ந்து பிசியாக இருக்கும் இவர் மூளைக்கு ஓய்வு கொடுப்பதற்காக கொஞ்சம் சிற்றின்பம் வேறு தேவைப்படுமாம். தூக்கம் வராமல் இருக்க? புதுசு புதுசா இசை ஞானம் பொறக்க? என்று மகிழ்ச்சி தரும் மருந்தை பயன்படுத்துகிறாராம்.