MR radha : ஒரு காலத்தில் நடிகர் எம் ஆர் ராதா இல்லாமல் அந்த படமே ஓடாது அந்த அளவிற்கு பெயரும் புகழும் பெற்றவர் நடிகர் எம் ஆர் ராதா. 1952 இல் எம் ஆர் ராதாவிற்கு பிறந்த மகன் தான் தற்போதைய நடிகர் ராதாரவி.
ராதாரவி பெரிய நடிகரான எம் ஆர் ராதாவின் மகன்தான் ஆனாலும் ஆரம்பகால கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு ராதாரவி சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது இருக்கும் பெரிய ஹீரோவையும் மிஞ்சும் அளவிற்கு ராதாரவி நடிப்பு திரையில் வெளியிடப்பட்டது. இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
வில்லனாக களம் இறங்கிய படங்கள்..
சூரியன், மூன்றாம் பிறை, சத்யா, அஞ்சாதே, சமீபம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வில்லனாக நடித்து ஒரு காலத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்காத சினிமாவை தனது திறமையான நடிப்பின் மூலம் ஒரு நிமிஷம் திரும்பி பார்க்க வைத்தார்.
தற்போது அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், ஒரு பேட்டியில் சினிமாவுக்கு நான் வந்ததற்கு காரணமே இவர்தான் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.
எனக்கு கடவுள் மாதிரி..
என்னதான் பெரிய நடிகர் எம் ஆர் ராதா மகன் என்றாலும், அந்த காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தர எனக்கு யாரும் தயாராக இல்லை. அப்போது உன்னால முடியும்-னு நம்பிக்கை கொடுத்து பெரிய நடிகனா வந்ததுக்கு காரணம் டி.ஆர். ராஜேந்திரன் தான். அவர் எனக்கு கடவுள் மாதிரி எப்போதும் இதை மறவ மாட்டேன்.