Kamal : கமலை பற்றி தொடர்ந்து நிறைய விமர்சனங்கள் வருவது வழக்கம் தான். பொதுவாகவே சினிமாவில் அனைத்து துறைகளிலும் கைதேர்ந்தவர் தான் கமல். ஆகையால் இயக்குனர்களிடம் கதையின் தலையிட்டால் பல படங்கள் தோல்வி அடைந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் அமீனா புகுந்த வீடும், கமல் புகுந்த இடமும் நல்லா இருந்ததாக சரித்திரமே இல்லை என்று பிரபலம் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது பிரபல தயாரிப்பாளர் ராஜன் அடிக்கடி கமலை சீண்டும்படி சில விஷயங்கள் பேசுவது வழக்கம்தான். தமிழ் மற்றும் கன்னட மொழி பிரச்சனை வந்த போது மட்டும் கமலுக்கு ஆதரவாக ராஜன் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கமலை பற்றி விமர்சித்த தயாரிப்பாளர்
இப்போது யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய ராஜன் கமல் எந்த இடத்தில் காலடி எடுத்து வைத்தாலும் உருப்படாது என்று கூறியிருக்கிறார். அதாவது ராஜன் ஒரு பள்ளியை திறந்து அமோகமாக நடத்தி வந்தாராம். அந்தப் பள்ளி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. அந்தப் பள்ளியை நடிகர் ஜெய்சங்கரை வைத்து தான் திறப்பு விழா நடத்தினார்.
அந்தச் சமயத்தில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் ஜெய்சங்கர். கருணாநிதி கதையில் வெளிவந்த வண்டிக்காரன் மகன் படத்தில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். ஜெய்சங்கர் தன்னிடம் வந்து உன்னை போல ஒரு பள்ளி திறக்க வேண்டும் என்று ராஜனிடம் கூறினாராம். அப்போது குறைந்த வகுப்புகள் கொண்ட ஆரம்ப பள்ளியாக இதை தொடங்குகள்.
அதன் பிறகு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று ராஜன் சொல்லி உள்ளார். அப்படி தொடங்கிய நிலையில் அந்தப் பள்ளியை கமலின் கையால் திறப்பு விழா நடத்தினார். அந்த பள்ளி இரண்டே வருடத்தில் மூடப்பட்டது. இவ்வாறு கமல் அழிக்க பிறந்தவன் என்று ராஜன் பேசியிருப்பது சர்ச்சையாக இருக்கிறது. அதோடு இப்போது திமுக கூட்டணியில் கமல் இணைந்திருப்பது தான் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது.