Vishnu vishal : நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழில் நிறைய கலகலப்பான படங்களை நமக்கு கொடுத்துள்ளார். இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது நிறைய படங்களை கொடுத்திருக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் அவர்களின் தம்பி அறிமுகமாகும் படமான ஓஹோ எந்தன் பேபி என்ற படத்திற்கு ப்ரமோஷன் வீடியோ ஒன்று அமீர்கான் அவர்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதனால் திரை உலகில் மற்றும் மக்களிடையே அமீர்கானுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இங்கிருந்து அங்கு எப்படி தொடர்பு இருக்க முடியும், அதுவும் இவ்வளவு நெருங்கிய தொடர்பு என அனைவரிடையிலும் பேச்சு எழுந்துள்ளது. இதற்கெல்லாம் வாயடைக்கும் விதமாக விஷ்ணு விஷால் அவர்கள் தற்போது அடித்த நேர்கானில் பதில் அளித்துள்ளார்.
அமீர்கான் சாருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இதுதான்..
அதாவது அமீர்கான் அம்மாவுடைய கேன்சர் சிகிச்சைக்காக அமீர்கான் மற்றும் அவர்களுடைய டீம் இரண்டு மாத காலம் என்னுடைய வீட்டில் ஒன்றாக தங்கி இருந்தோம். அதைப் பற்றி நான் வெளியே எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
அது மட்டுமல்லாமல் இரண்டு வருட காலமாக நானும் என் மனைவியும் குழந்தைக்காக அவ்வளவு முயற்சித்தும் எதுவும் கை கூடவில்லை. இதை அறிந்து அமீர்கான் அவர்கள் அது எல்லாத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு உடனே கிளம்பி “பாம்பே” வரவும் என்று எங்களை அழைத்தார்.
அங்கு நாங்கள் சென்று அவர் பரிந்துரைத்த டாக்டரிடம் சிகிச்சை பெற்று தற்போது எங்களுக்கு குழந்தை உள்ளது. அதற்காக நாங்கள் அமீர்கான் அவர்களின் வீட்டில் 10 மாத காலம் தங்கியிருந்தோம் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் மனம் திறந்து பேசி உள்ளார் விஷ்ணு விஷால்.
ஒரு ஒரு சினிமா துறையில் உள்ளவர்களுக்கிடையே இப்படி ஒரு குடும்பம் சார்ந்த உறவு இருப்பது மேலும் இவர்கள் மீது மரியாதை வர வைக்கிறது. இது போன்ற நல்ல நட்பு பாராட்டும் மனிதர்களும் திரையுலகில் ஏராளம்.