Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி ஷோரூம் இல் இருக்கும் பொழுது அங்கே வேலை பார்க்கும் ராணி, ரோகிணியை கூப்பிட்டு வசியம் பண்ண கூடிய லேகியத்தை கொடுத்து தினமும் பாலில் கலந்து கொடுத்தால் புருஷன் உங்க பேச்சைக் கேட்டு நீங்க சொல்வது தான் செய்வார் என்று சொல்கிறார்.
உடனே ரோகிணி இதுதான் எனக்கு வேண்டும் என்று ஆசையுடன் அந்த லேகியத்தை வாங்கி ஆயிரம் ரூபாயை கொடுத்து விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் மனோஜ்க்கு பாலில் லேகியத்தை கலந்து கொடுப்பதற்காக ரோகிணி தயாராகி விட்டார்.
அந்த நேரத்தில் முத்து, கிருஷை வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் ரோகிணி பயந்து போய்விட்டார். முத்துவுக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. அதனால் வீட்டில் எல்லோரையும் கூப்பிட்டு சொல்லப் போகிறார் என்று ரோகினி பயப்பட ஆரம்பித்து விட்டார்.
பிறகு முத்து கூப்பிட்டதும் எல்லாரும் வீட்டுக்குள் வந்ததும் க்ரிஷ் இங்கே ஒரு பத்து நாளைக்கு இருக்கப் போகிறார். இவனுடைய பாட்டிக்கு அடிபட்டுவிட்டது, அதனால் ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்கிறார். கிரிஸ்க்கு போக இடம் இல்லை என்பதால் நான் இங்கே கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே விஜயா வழக்கம் போல் திட்ட ஆரம்பிக்கிறார்.
அப்பொழுது மனோஜ் பக்கத்தில் சென்று அந்தப் பையனை பார்த்தால் பாவமாக இருக்கிறது இங்கே இருக்கட்டும் என்று நீங்களும் சொல்லுங்கள் என ரோகிணி சொல்கிறார். அதன்படி மனோஜ், விஜயாவிடம் அந்த பையன் இங்கே இருக்கட்டும் என்று சொல்கிறார். பிறகு முத்து சொல்வது சரி என்று எல்லோரும் கை தூக்கி நிலையில் ரோகிணியும் கை தூக்கி விடுகிறார்.
ரோகிணி எப்பொழுதும் விஜயாவுக்கு தான் ஜால்ரா அடிப்பார். முதன்முறையாக நமக்கு சாதகமாக ரோகினி நடந்து கொள்கிறாரே என்று முத்து மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. அடுத்ததாக கிருஷை இந்த வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதற்கு மீனா முத்து தயாராகி விட்டார்கள். பிறகு ரோகிணி ஹாஸ்பிடல் இருக்கும் அம்மாவை பார்த்து ஒழுங்கா பார்த்து போக மாட்டியா உன்னால எனக்கு தேவையில்லாத பிரச்சினை.
முத்து வரும்பொழுது கிரிஷியும் இங்கே கூட்டிட்டு வந்து விட சொல்லு என கரராக பேசுகிறார். அடுத்ததாக எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அம்மா பாசத்தில் ஏங்கி அம்மா கூட தூங்க வேண்டும் என்பதற்காக கிரிஷ் யாருக்கும் தெரியாமல் ரோகிணி இருக்கும் ரூமுக்கு சென்று ரோகிணியிடம் பேசுகிறார். அப்பொழுது ரோகிணி நான் தான் உங்க அம்மா என்று யாரிடமும் எப்பொழுதும் சொல்லக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் மீனா, பக்கத்தில் படுத்திருந்த கிருஷை காணும் என்று தேடி பார்க்கிறார். அப்பொழுது ரோகினி ரூமில் இருந்து வெளியே வரும்பொழுது மீனாவுக்கு இன்னும் அதிக அளவில் சந்தேகம் வந்துவிடும். இதனை தொடர்ந்து முத்து மீனா, க்ரிஷ் இன் உண்மையான அம்மா யார் என்று கண்டுபிடிக்க போகிறார்கள்.