Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், ஏலகிரி போன இடத்தில் நிலவின் குடும்பத்திற்கும் சேரன் குடும்பத்திற்கும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. அதிலும் பல்லவன், குழந்தையை கடத்த பார்த்தான் என்று நிலாவின் அம்மா வாய் கூசாமல் பொய் சொல்லி சண்டை போட்டுவிட்டார். அத்துடன் நிலவைப் பார்த்து அசிங்கமாக பேசி அவமானப்படுத்தி விட்டார்.
இதனால் அனைவரும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டார்கள். வீட்டிற்கு வந்தும் நடேசன் கதவை பூட்டிவிட்டு எங்கேயோ போய்விட்டார். அதனால் ரொம்ப நேரம் ஆகியும் அனைவரும் வாசல்யே காத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு நடேசன் வந்ததும் பாண்டியன் பல்லவன் சோழன் அனைவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு வழியாக இந்த பிரச்சினை எல்லாம் சரி செய்துவிட்டு சேரன் வழக்கம்போல் வேலைக்கு கிளம்பி போவதற்கு தயாராகி விட்டார். கூடவே பாண்டியனும் பேசிக் கொண்டே போகும் பொழுது கார்த்திகா வீட்டை தாண்டி தான் போகிறார்கள். அப்பொழுது கார்த்திகா வீட்டில் கார்த்திகாவிற்கு கல்யாணம் பலமாக ஏற்பாடு பண்ணுகிறார்கள்.
இதை பார்த்ததும் சேரன் மனசு கொஞ்சம் காயப்படுத்துகிறது. வழக்கம் போல் கார்த்திகா ஜன்னலில் இருந்து வேடிக்கை பார்க்கும் பொழுது சேரன் போவதையும் பார்த்து பீல் பண்ணுகிறார். இந்த கல்யாணத்தில் கார்த்திகாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் நிலையான ஒரு முடிவு எடுக்க முடியாமல் அம்மா சொல்வதைக் கேட்டு குழப்பத்திலேயே இருக்கிறார்.
அந்த வகையில் கார்த்திகாவுடன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை உடன் கல்யாணம் நடந்துவிடும். சேரனுக்கு மனைவியாகத்தான் புது கதாநாயகி வரப் போகிறார். அடுத்ததாக நிலவை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காக அண்ணி நிலா வீட்டுக்கு வருகிறார். வந்ததும் வீட்டை பார்த்து இது பாழடைந்த வீடாக இருக்கிறது, இந்த வீட்டில் நிலா எப்படி தங்குகிறாள் என்று யோசிக்கிறார்.
அடுத்ததாக பாத்ரூம் போய் பார்த்ததும் நிலாவின் அண்ணி கண்ராவியாக இருக்கிறது என்று சொல்லி வெளியே வந்து விடுகிறார். இதனால் இந்த விஷயத்தை எல்லாம் பற்றி நிலாவிடம் சொல்லி நிலா மனுசை மாற்றி எப்படியாவது வீட்டிற்கு கூட்டிட்டு போவதற்கு அண்ணி ஏற்பாடு பண்ணப் போகிறார்.
ஏனென்றால் நிலாவின் அண்ணிக்கும் தெரியும், நிலாக்கும் சோழனுக்கும் பொய் கல்யாணம் தான் நடந்திருக்கிறது என்று. அதனால் நிச்சயம் நிலவின் அண்ணி மூலம் பல திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.