Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா எப்பொழுதுமே சோழனை வெறுப்பேற்றும் விதமாக திட்டி உதாசீனப்படுத்தியதால் சோழன் கடுப்பாகிவிட்டார். அத்துடன் சோழனிடம் நடேசன் தேவையில்லாத விஷயங்களை பேசி ரொம்பவே காயப்படுத்தி விட்டார். இதனால் கோபமான சோழன் விரக்தியில் நிதானம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்து விட்டார்.
குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சேரன் பாண்டியன் பல்லவன் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நிலா ரூமுக்கு போய்விடுகிறார். அப்பொழுதும் நிலாவின் பக்கத்தில் படுத்து கொண்ட பொழுது நிலா எழுந்து என்னாச்சு ஏன் இங்கு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு ஏன் பதட்டம் ஆகிறாய் நான் உனக்கு தாலி கட்டின புருஷன் தானே. எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்லிய நிலையில் நிலா கத்த ஆரம்பித்து விடுகிறார்.
நிலா சத்தத்தை கேட்டு சேரன் எழுந்து பாண்டியன் பல்லவனையும் எழுப்பி விடுகிறார். பிறகு ரூமுக்குள் இருந்து நிலாவிடம் சோழன் பிரச்சனை பண்ணுகிறார் என்று தெரிந்ததும் சேரன் கதவை தட்டுகிறார். ஆனால் சோழன் கதவு திறக்காமல் நீங்க யாரும் பஞ்சாயத்துக்கு வர வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நிலா என்னுடைய பொண்டாட்டி எனக்கு என்ன பண்ணனும் தெரியும் என்று சொல்கிறார்.
உடனே நிலா அழுது கொண்டே சோழனை தள்ளிவிட்டு கதவை திறந்து விடுகிறார். பிறகு சேரன் பாண்டியன் பல்லவன் அனைவரும் ரூமுக்குள் சென்று என்னாச்சு என்று கேட்ட பொழுது நிலா நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே சேரன், சோழனை அடித்து விடுகிறார். ஆனாலும் சோழன், புரிந்து கொள்ளாமல் எல்லாரையும் திட்டிய நிலையில் பாண்டியன் சோழனை கூட்டிட்டு வெளியே வந்து விடுகிறார்.
பிறகு இன்னொரு ரூமில் சோழனை படுக்க வைக்கிறார், ஆனால் சோழன் எதையும் கேட்காமல் பிரச்சனை பண்ணியதால் பாண்டியனும் சோழனை அடித்து ரூமுக்குள் வைத்து பூட்டி விடுகிறார். பிறகு இதை எல்லாம் பார்த்து பயந்த நிலா, நம்ம வீடு தானே என்ற ஒரு நம்பிக்கையில் கதவை பூட்டாமல் தூங்கினது தப்பா போய்விட்டது என்று அழுது கொண்டே சேரனிடம் சொல்கிறார்.
சேரன் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி நிலவை தூங்க சொல்கிறார். பிறகு நிலா அந்த ரூம் கதவை லாக் பண்ணிவிட்டு அழ ஆரம்பிக்கிறார். அதனால் இனியும் இங்கே இருக்காமல் வீட்டை விட்டு போவதற்கு நிலா முடிவெடுக்க போகிறார். சோழன் செய்த தவறால் நிலவை இரு என்று சேரன் பாண்டியன் பல்லவன் சொல்ல முடியாமல் அவர்களும் வெளியே அனுப்புவதற்கு தயாராகி விடுவார்கள்.
அந்த வகையில் வீட்டை விட்டு நிலா ஹாஸ்டலுக்கு போயி வேலை பார்ப்பார். பிறகு சோழன் செய்த தவறை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பார். ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை, இதை தான் மனோகரும் எதிர்பார்த்தார் என்பதற்கு ஏற்ப தற்போது இந்த குடும்பத்தை விட்டு நிலா பிரிய போகிறார்.