Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் கொடுத்த புகார் அடிப்படையில் போலீஸ் சக்திவேலு வீட்டிற்கு சென்று குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக வந்து விட்டார்கள். இதை தடுப்பதற்காக சக்திவேல் முத்துவேல் போலீஸ் இடம் பேசி பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் எது வேண்டுமானாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி வலுக்கட்டாயமாக குமாரை கூட்டிட்டு போய் விடுகிறார்கள்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களிடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் என் பையனை நான் வெளியே கூட்டிட்டு வந்து காட்டுகிறேன் என்று சக்திவேல் சவால் விடுகிறார். அத்துடன் பரிதாபமாக அரசியும் பார்க்கிறார். அதே மாதிரி ராஜியும் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு கதிர், ராஜிடம் உங்க அண்ணனை பார்க்கும் பொழுது உனக்கு கஷ்டமாக இருக்கிறதா என்று கேட்கிறார்.
அதற்கு ராஜி அவன் செய்த தவறுக்கு உனக்கு கிடைக்கும் தண்டனை தான் இது. ஆனால் நான் அதை நினைத்து பீல் பண்ணவில்லை என்னுடைய சித்தியும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுகிறார்கள் அதை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறார். அதே மாதிரி குமாரை இப்படி ஒரு நிலைமையில் பார்த்ததற்காக குமாரின் அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். ஆனாலும் சக்திவேல் மற்றும் முத்துவேல் எவ்வளவு முயற்சி எடுத்தும் மறைவிழியை கூட்டிட்டு வர முடியவில்லை.
இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆன நிலையில் அப்பத்தா தான் இவர்களை சமாதானப்படுத்துகிறார். நினைத்து மொத்த குடும்பமும் பரிதவித்து போய் நிற்கிறார்கள். அடுத்ததாக பாண்டியன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பழனிடம் உனக்கு இங்கே வேலை பார்ப்பதில் ஏதாவது கஷ்டம் இருக்கிறதா? மனசுல ஏதாவது பிரச்சனையாக இருந்தால் சொல்லி விடுங்கள் என கேட்கிறார்.
அப்பொழுது சரவணன் மற்றும் பழனியும் எங்களுக்கு அப்படி எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். உடனே பாண்டியன், கதிர் என்ன பண்ணப் போகிறான் என்று கேட்கிறார். அதற்கு பழனி அவன் டிராவல்ஸ் பண்ணுவதற்கு முயற்சி எடுத்து வருகிறான். அதற்காக லோன் விஷயமாக அலைந்து கொண்டிருக்கிறான் என்று சரவணன் சொல்கிறார். இதைக் கேட்ட பாண்டியன், கதிர் முன்னேற்றத்திற்காக நிச்சயம் உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது.
அடுத்ததாக சரவணன், தனிமையில் இருக்கும் அரசியை கூட்டிட்டு வந்து சாப்பாடு ஊட்டி வெளியே கூட்டிட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு வருகிறேன் என்று கோமதியிடம் சொல்லிவிட்டு அரசியை கூட்டிட்டு போகிறார். அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பொறுப்பாக நடந்து கொள்ளும் விதமாக சரவணன் அரசி மனசை மாற்றிக் கொண்டு வருகிறார்.