Vijay : தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் வளர்ச்சிப் பயணம் ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்று. இன்றைய முன்னணி நடிகராக விஜய் உயர்ந்தாலும், அவர் ஆரம்ப காலத்தில் பல சவால்களை சந்தித்தார். அப்போது “செந்தூரப்பாண்டி” படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தது, விஜயின் கேரியரில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
கேப்டன் தொண்டர்களின் கேள்வி?
ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவும் ஒரு விவாதம், ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. “விஜயகாந்த் அப்போது விஜயை உதவினார்; ஆனால் விஜய், அவரது மகன் சண்முகபாண்டியன்-க்கு சினிமாவில் உதவியிருக்கலாம்” என்ற கருத்து அதிகம் பேசப்படுகிறது. சிலர் விஜயை விமர்சித்து, “நன்றியை மறந்துவிட்டாரா விஜய்?” என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
சண்முகபாண்டியன் தனது முதல் படமான “Sagaptham” மூலம் சினிமாவில் அறிமுகமானாலும், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. பின்னர் அவர் நடித்த படங்களும் பெரும் வரவேற்பு பெறாததால், அவர் தற்போது சினிமாவில் சற்று பின்தங்கியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே, “விஜய் ஒரு பெரிய நட்சத்திரமாக உயர்ந்த பிறகு சண்முகபாண்டியனுக்கு ஆதரவு தந்திருக்கலாம்” என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
விஜய் ரசிகர்களின் பதில்..
ஆனால் விஜயின் ரசிகர்கள், இந்த விமர்சனத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். “விஜயகாந்த் அப்போது தனது நட்பால் விஜயை ஆதரித்தார். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பயணங்கள் இருக்கும். உதவி என்றால் கேரியரை நிரந்தரமாக அமைக்க முடியாது. சண்முகபாண்டியனுக்கு திறமையும், சரியான வாய்ப்புகளும் தேவை” என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த விவாதம் தமிழ் சினிமாவின் நட்பு, ஆதரவு மற்றும் போட்டி கலாச்சாரம் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயகாந்த், தனது காலத்தில் பல நடிகர்களை ஊக்குவித்தவர் என்ற புகழ் பெற்றவர். அவரின் மகனின் பயணம் வெற்றியடையுமா என்பது இன்னும் காலம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
இந்நிலையில், விஜய் தனது அரசியல் பயணத்திலும், சினிமா கேரியரிலும் பிஸியாக இருக்கிறார். சமூக ஊடகங்களில் கிளம்பிய இந்த விவாதம் அவரின் ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பாக மாறியுள்ளது. ஆனால் என்றுமே விஜய் மற்றும் அவரது குடும்பம் விஜயகாந்தை மறந்ததில்லை என்று விஜய் அப்பா சந்திரசேகரே தெரிவித்துள்ளார்.
முடிவாக..
சூழ்நிலை காரணமாக சில சம்பவங்களை நடைபெறலாம். அதெயெல்லாம் விஜய் அரசியலோடு ஒப்பிடுவது என்பது தவறானது. விஜய் நன்றியை மறந்திருந்தால் கேப்டன் பெயரை சொல்லவேண்டும் என்ற அவசியமே இல்லை எனவும் கேப்டன் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்களாம்.