Arvind Swamy: போ..தை மருந்து பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதன் மூலம் கோலிவுட்டின் நைட் பார்ட்டி ரகசியமும் அம்பலமானது.
ஆனால் இப்போது திருப்பூர் இளம் பெண், திருப்புவனம் இளைஞர் என அடுத்தடுத்த மரண செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்து விட்டது. அதனால் இந்த போ..தை மருந்து விவகாரம் பின்தங்கி இருக்கிறது.
ஆனாலும் திரையுலகில் நடக்கும் பல ரகசிய விஷயங்களை பாடகி சுசித்ரா வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார். அப்படித்தான் இந்த மருந்தை வடநாட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ஒரு நடிகைக்கு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சாமிக்கு ஆசை காட்டிய நடிகை
அதிலும் அவர் இந்த மருந்தை நடிகர் அரவிந்த்சாமி, அர்ஜுன் ஆகியோருக்கு கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார். அவர் ஆசை காட்டியும் கூட இவர்கள் இருவரும் அதை மறுத்துள்ளனர்.
அதிலும் அர்ஜுன் அந்த நடிகையை அடிக்கவே சென்று விட்டார் என சுசித்ரா கூறியுள்ளார். அதே சமயம் பிரபல மூத்த இயக்குனருக்கு இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்ததும் இந்த நடிகை தான்.
அவருடைய முன்னாள் காதலர் இந்த பிசினஸில் பெரிய டீலராக இருந்தார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி ட்விஸ்ட் வைத்து கடைசியில் அந்த நடிகை மனிஷா கொய்ராலா என அவர் போட்டு உடைத்து இருக்கிறார்.
இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வடமாநிலத்தில் இருந்து வந்து இப்படி ஒரு வேலையை இவர் பார்த்தாரா என நெட்டிசன்கள் அவரை கமெண்ட் பாக்ஸில் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.