Rajini : சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல தான் தற்போது வரை ரஜினி விளங்கி வருகிறார். அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் 50 வருடத்தை நிறைவு செய்து இருக்கிறார்.
சமீபத்தில் ரஜினியின் கூலி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தனை வருட திரை வாழ்க்கையில் தற்போதும் கதாநாயகனாக முன்னணி இடத்தில் இருந்து வருகிறார். அதை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக பிரபலங்கள் எல்லோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல், வைரமுத்து, அனிருத் போன்ற எக்கச்சக்க பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத விஜய்
மற்றொருபுறம் அரசியல் பிரபலங்களான எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களது x தளம் வாயிலாக ரஜினிக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியும் ரஜினியின் சினிமா வாழ்க்கையை பாராட்டி, தொடர்ச்சியான வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்று வாழ்த்து இருந்தார்.
இவ்வளவு பிரபலங்கள் வாழ்த்தியும் தளபதி விஜய் வாழ்த்தாதது பேசு பொருளாக மாறி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய் கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் சக நடிகர் என்ற சார்பில் கூட ரஜினிக்கு வாழ்த்து கூறியிருக்கலாம்.
ஆனால் ரஜினியை நிராகரிப்பது போல் அவர் மௌனம் காப்பது இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் இப்போது போட்டி நடிகர்களாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் விஜய் தான். இவர்களது இரண்டு படங்களும் தான் அதிக வசூல் வேட்டை ஆடி வருகிறது.
சினிமாவில் போட்டி இருந்தாலும் பொது வழியில் நட்பு பாராட்டுவது மிகவும் முக்கியம். இதுதான் ஒரு ஆரோக்கியமான சூழலையும் ஏற்படுத்தும். ஆனால் விஜய்யின் இந்த பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.