Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஈஸ்வரி சுயநினைவை இழந்து கோமா ஸ்டேஜில் இருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லாமல் தர்ஷன் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று குணசேகரன் கும்பல் கல்யாண வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மண்டபத்தை புக் பண்ணிட்டு வரலாம் என குணசேகரன், கதிர் ஞானம் கரிகாலன் என அனைவரும் கிளம்பி விடுகிறார்கள்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஜனனி ரேணுகா நந்தினி தர்ஷினி என அனைவரும் சேர்ந்து அறிவுகரசியிடம் இருக்கும் போனில் ஆதாரத்தை எடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் இவர்கள் அந்த ஆதாரத்தை பார்க்க கூடாது என்று அறிவுக்கரசி அந்த போனை இடுப்பில் மறைத்து வைத்து விடுகிறார். இந்த போனை எப்படியாவது வாங்க வேண்டும் என்று ரவுண்டு கட்டி அறிவுக்கரசியை அடித்து போனை கொடுக்க சொல்லி கேட்கிறார்கள்.
அந்த சமயத்தில் மண்டபத்தை புக் பண்ண போன குணசேகரன் கும்பல் பணத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டார்கள் என்று மறுபடியும் வீட்டிற்கு வருகிறார்கள். இவர்கள் வருவதை தெரிந்து கொண்ட அறிவுகரசி அந்த போனை எடுத்து வெளியே வீசிவிடுகிறார். இது தெரியாத குணசேகரன் கார் உள்ளே வரும்போது அந்த போனில் ஏறி விடுகிறது. இதனால் அந்த போன் உடைந்து விடுகிறது.
பிறகு தர்ஷினி வெளியே போய் அந்த போனை எடுத்துப் பார்க்கிறார், உடனே குணசேகரன் அப்படியே அந்த போனில் என்ன இருக்கிறது என்று புடுங்கிவிட்டு கரிகாலனுக்கு தெரிந்த நண்பரே ஒருவரை வரச்சொல்லி அந்த போனை ரிப்பேர் பண்ண சொல்கிறார். இதனால் என்ன ஆகும் என்ற பயத்தில் அறிவுக்கரசி இருக்கிறார். அத்துடன் வீட்டில் நமக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடக்கிறது என்று யோசித்த குணசேகரன் வீட்டில் சில இடங்களில் சிசிடிவி கேமராவை வைப்பதற்கு பிளான் பண்ணிவிட்டார்.
இந்த சூழ்நிலையில் அந்த போனை சரிபார்த்த நபர் அதில் இருக்கும் குணசேகரன் ஈஸ்வரி வீடியோவை பார்த்து விடுகிறார். இதை வைத்து குணசேகரை பிளாக்மெயில் பண்ணி பணம் கேட்கலாம் என்று அந்த நபர்கள் முடிவு பண்ணுகிறார்கள். அப்படி கேட்கும் பொழுது ஜனனிடம் வசமாக மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பிறகு ஜனனிடம் அந்த ஆதாரம் கிடைத்ததும் இந்த ஆதாரத்தை வைத்து குணசேகரனின் ஆட்டத்தை முடித்து வைக்க போகிறார்.