Vishal : சமீபகாலமாக விஷாலின் உடல்நிலை குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தது. இந்த சூழலில் இன்ப அதிர்ச்சியாக விஷால் நடிகை சாய் தன்சிகாவை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதை அதிகாரப்பூர்வமாகவே இருவரும் அறிவித்து இருக்கின்றனர். இந்த சூழலில் இன்றைய தினம் ரெட் ஃப்ளவர் பட விழாவில் கலந்து கொண்ட விஷால் ஆவேசப்பட்டு சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதாவது சிலரை தியேட்டர் பக்கமே விடக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
சமீபகாலமாக ரசிகர்கள் நேரடியாக தியேட்டருக்கு சென்று படங்களை பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். காரணம் நாம் கொடுக்கும் பணம் வொர்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக சினிமா விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு வருகிறார்கள்.
சினிமா விமர்சகர்கள் குறித்து பேசிய விஷால்
ஆனால் பெரும்பாலான விமர்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு படங்களை விமர்சிப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நன்றாக இருக்கும் படத்தையும் மோசமாக விமர்சித்து படத்தை ஓட விடாமல் செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய விஷால் நீங்க தப்பா நினைச்சாலும் இதை சொல்லியே தீருவேன் என்று கூறியிருக்கிறார். அதாவது தியேட்டர் முன்னாள் ரிவ்யூ என்ற பெயரில் மைக்கை நீட்டி வந்தால் தியேட்டர் உள்ளேயே விடாதீர்கள். படம் ரிலீஸாகும் மூன்று நாட்கள், அதாவது 12 காட்சிகள் தியேட்டர் வளாகத்துக்குள் ரிவ்யூ பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க கூடாது.
தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விஷால் வைத்திருக்கிறார். அவர் பேசியதற்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.