அவசர கதியில் வெளியாகும் குபேரா.. தனுஷ் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா.? – Cinemapettai

Tamil Cinema News

Dhanush : தனுஷ் நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் குபேரா படம் வருகின்ற ஜூன் இருபதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என மிகப் பெரிய நட்சத்திரம் பட்டாளம் இந்த படத்தில் இணைந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் போஸ்டரில் தனுஷ் ஒரு வித்தியாசமான லுக்கில் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக குபேரா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

தியேட்டரில் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் படங்கள் வெளியாகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே ஓடிடி பெரிய தொகைக்கு படங்களை வாங்கி விடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் ஓடிடி நிறுவனங்கள் தான் படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கிறார்களாம்.

தனுஷின் குபேரா படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

அந்த வகையில் குபேரா படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. தயாரிப்பாளர் குபேரா படத்தை ஜூலை மாதத்தில் ஒரு தேதியை சொல்லுங்கள் ரிலீஸ் செய்யலாம் என்று கூறியிருந்தாராம்.

ஆனால் ஓடிடி நிறுவனம் ஜூன் 20 குபேரா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனராம். இதனால் அவசர கதியில் இப்போது குபேரா படம் வெளியாக இருக்கிறதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் இன்னும் அவகாசம் வேண்டும் என்பதால் தயாரிப்பாளர் ஜூலை மாதம் கேட்டுள்ளார்.

ஆனால் ஓடிடி நிறுவனம் விடாப்பிடியாக இருந்ததால் இப்போது அவசர அவசரமாக வேலை நடந்து வருகிறதாம். இதனால் படம் நினைத்த மாதிரி வருமா என்ற சந்தேகம் படகுழுக்கே இருக்கிறதாம். சமீபத்தில் தக் லைஃப் படம் தான் மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில் குபேரா இதில் தப்பிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அவசர கதியில் வெளியாகும் குபேரா.. தனுஷ் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா.?

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.